தலிபான் இயக்கத்துடன் பேசப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமெரிக்கா அரசாங்க அறிக்கை ஒன்று ஆப்கான் தாலிபான் இயக்கம் அமெரிக்காவின் எதிரியல்ல என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேச்சுக்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக தகவகள் தெரிவிக்கின்றது.
இதேவளை தாலிபான் அமைப்பு கட்டாரில் ஒரு அலுவலகத்தை திறப்பதற்கு தான் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டேன் என்று ஆப்கான் கர்சாய் தெரிவித்துள்ளார் , கட்டாரில் துறக்கப்படவுள்ள தாலிபான் அலுவலகம் பேச்சுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமெரிக்காவின் எதிரிகள் பட்டியலில் இருந்து தாலிபான் அமைப்பின் பெயர் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானமை குறிபிடத்தக்கது.
தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த இஸ்லாமிய அமைப்பாகும். 2001 ஆம் ஆண்டில் அமெரிக்கா புஷ் அரசு கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியுடன் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போரின் மூலம் தாலிபான் அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டது. தலிபான் அமைப்பு பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் போரிட்டு வருகிறது இந்த வருடத்தில் மட்டும் 500 க்கும் அதிகமான நேட்டோ இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முஹம்மத் உமர் ஆவார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போருக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக