பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீது கடுமையான ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் துணைத்தளபதி அஹ்மத் ஜஃபரி இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்டதைத் தொடர்ந்தே இத்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
தலைநகர் டெல்அவிவ் மீது ரொக்கட்கள் விழுந்ததாக இஸ்ரேல் முதற்தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளது. பல்வேறு நகரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்;குதலில் இதுவரை 6 ஸியோனிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சரமாரியான ரொக்கட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் தென் பகுதியிலிருந்து வடபகுதி பிரதேசங்களை நோக்கி ஸியோனிஸ்ட்கள் தப்பியோடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
