வெள்ளி, 30 செப்டம்பர், 2011

இருள் சூழ்ந்த தாமரையும் நான்தானே


தெய்வம் தந்த உறவே

என்னைத் தேடி வந்த புது வரவே

கண்ணில் இன்று நீரை

கங்கை போல ஏன் ஓட விட்டாய்!.....



நள்ளிரவில் சூரியனாய்

நான் அழைத்த என் தலைவா

சொல்லு ஒரு வார்த்தை

என் சோகம் தீர்ந்து போவதற்கு ....



விண்வெளியில் நீ உலவ

உனைக்கண்டு விழித்த மலர் நான் கருக

என் அருமை புரியாமல்

எதர்க்காக எனை வதைக்கின்றாய்....!!!



சொல்லாமல் புரிவதெங்கே .......

நீ இல்லாமல் நான் வாழ்வதெங்கே ..

எல்லாமே மாயை என்பேன்

நான் எதற்காகப் பிறந்தேன் இங்கே !....



ல்லாத காதல் உணர்வை நீ ஏனோ

எனக்குள்ளே வரவளைத்தாய் ....

பதில் சொல்லாமல் பிரிந்து சென்று

என்னைப் பாடாய்ப் படுத்தும் அன்பே...



எல்லாமே நாடகம் போல்

எழுதாத துன்பக் காவியம் போல்

முன்னாளில் நான் செய்த பாவத்திற்கு

இந்நாளில் நீ தந்த பரிசோ ..............//



சொல்லு ஒரு வார்த்தை அது போதும்

உன் சுந்தர மொழி கேட்டுப் பலகாலம்

என் எழில் கொஞ்சும் பாடலின் தலைவா

இந்த ஏமாற்றம் எனக்கென்ன புதிதா,,,,,

வர்த்தக தலைநகராக ஹம்பாந்தோட்டே

கொழும்பின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் ஹம்பாந்தோட்டைக்கு நகர்த்தி அதனையே இலங்கையின் வர்த்தகத் தலைநகரமா மாற்றும் திட்டம் குறித்து தற்போது அரசு ஆராய்ந்து வருவதாக துறைமுக அதிகார சபையின் தலைவரான கலாநிதி பிறியத் பந்துல விக்கிரம தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை நகரை வர்த்தக மற்றும் தொழில் நுட்ப நகரமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு நகரை வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு திட்டமொன்றினை செயற்படுத்த கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிபிடக்தக்கது
கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தேட்டையில் தேவையான அளவு நிலம் உள்ளதன் காரணமாகவுமே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது எனவும் கலாநிதி பிறியத் பந்துல அவர் தெரிவித்துள்ளார்
நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற துறைமுக பாதுகாப்பு அதிகாரிகளின் மகாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அண்மையில் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டதுடன் விமான நிலைய அமைப்புப் பணிகளும் துரிதமாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் நிர்வாக தலைநகரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே , வர்த்தக தலைநகரர் ஹம்பாந்தோட்டே அப்ப கொழும்பு

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்-பெருமளவில் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் மக்கள்


இது, பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான “தி இண்டிபெண்டன்ட்” தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.
———————-
“பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.
பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை.
ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.
அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், ”மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை”என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ” எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்”.
ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,”பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்”.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, ”இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன” என்று குறிப்பிடுகின்றார்.
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, “இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்” என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்.”
—————————-நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.
அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள்.
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு.
  • One Reason - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு.
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம்.
மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன.
இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப்பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.
இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

வியாழன், 29 செப்டம்பர், 2011

அரபு நாட்டு தலைவர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு பாராட்டு


காத்தான்குடியில் பேரீத்த மரங்கள் நடப்பட்டு அதிலிருந்து பழங்கள் பறித்ததையிட்டு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு அண்மையில் அரபு நாட்டு தலைவர்கள் சவூதி அரேபிய தேசிய நிகழ்வின் போது பாராட்டு தெரிவித்தனர்.
இவ்வாறு பேரீத்த மரங்கள் நடப்பட்டு அதிலிருந்து பழங்கள் பறித்ததையிட்டு அரபு நாட்டு தலைவர்கள் மகிழ்ச்சியடைந்ததோடு தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்தனர், இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இப்புகைப்படத்தில் சவூதி நாட்டு தூதுவர், பலஸ்தீன நாட்டு தூதுவர், குவைத் நாட்டு தூதுவர், கட்டார் நாட்டு தூதுவர், சவூதி அரேபியாவினுடைய பணிப்பாளர் ஆகியோர் காணப்படுகின்றனர்.

புதன், 28 செப்டம்பர், 2011

அமெரிக்க இராணுவ மனநோயாளிகளின் ஆப்கானிய வேட்டை – அமெரிக்காவின் போர் குற்றங்கள்


அமெரிக்கா உலகம் முழுவதும் தன்னை ஜனநாயக தேசமாகவும், மனித உரிமைக்காக போராடும் தேசமாகவும் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால் அதன் கோர முகம் உலகிற்கு அவ்வளவாக தெரிவதில்லை.
அமெரிக்க இராணுவத்தில் மனநோயாளிகள் (psychopaths) தொகை அதிகமாகி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அவர்கள் சாதாரண நிலையில் எம்மைப் போன்ற மனிதர்களாக நாகரீகமாக செயற்படுவதாகவும், திடீரென மேற்கொள்ளப்படும் முஜாஹிதீன்களின் தாக்குதலில் அவர்களிற்கு ஏற்படும் அதிர்ச்சியும் இழப்பும் அவர்கள தீவிரமான மனநோயளிகளாக மாற்றுவதுடன் காட்டுத்தனமான செயற்பாடுகளை புரிபவர்களாகவும் அது கூறியுள்ளது. இதனை அமெரிக்கன் ஜெர்னல் ( US journal Rolling Stone)எனும் சஞ்சிகையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. இதே செய்தியை ஜேர்மனியை தளமாகக் கொண்டியங்கும் German daily Der Spiegel தினப்பத்திரிகையும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
There are two Psychopaths
தாக்குதல் ஒன்றில் சிக்கும் அமெரிக்க இராணுவ அணி( Platton) கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த தமது சாக்களின் இழப்பால் வெகுண்டெழுந்த நிலையி்ல் அப்பிராந்தியத்தில் கையில் கிடைக்கும் அப்பாவி ஆப்கானியர்களை கொன்று குவிக்கிறது. இதில் விஷேட அம்சம் என்னவென்றால் மேற்படி இராணுவ அணியில் காணப்படும் சைகோபாட் எனும் உளநோயாளிகளின் நடவடிக்கை மனித கற்பனைக்கும் அப்பாற்பட்ட கொடூரங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது.
அமெரிக்க இராணுவ மிருகங்களின் அருவருக்கத்தக்க மனித விரோத செயற்பாடுகள் சில..
  • கொல்லப்பட்ட ஆப்கானியரின் ஆணுறுப்பை வெட்டியெடுத்து தங்கள் துப்பாக்கி குழல்களில் தொங்க விடுவது.
  • கொல்லப்பட்ட ஆப்கானியரின் பின்னுறுப்பினுள் டைனமைட் எனும் வெடிபொருளை செலுத்தி வெடிக்க வைத்து ரசிப்பது.
  • கொல்லப்பட்ட ஆப்கானியரின் ஈரல் குலையை தோண்டி எடுத்து வானை நோக்கி எறிந்து விட்டு துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவது. (Burst Fire)
  • கொல்லப்பட்ட ஆப்கானியரின் தலையை தனியாக வெட்டியெடுத்து முகாம் கொண்டு சென்று அல்லது தாங்கள் தற்காலிகமாக தரிக்கும் இரவு நேர கூடாரங்களில் ரோஸ் செய்யப்படும் உணவை உண்டாவாறு இரும்பு கம்பியில் தலையை செலுத்தி ரோஸ் செய்து மகிழ்வது.
  • கைது செய்யப்பட்ட ஆப்கானியரை (P.O.W.) நிர்வாணப்படுத்தி அவரது ஆணுறுப்பையும், இந்திரிய பையையும் பற்களால் கடித்து குதறுவது.
இப்படி காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் பலவற்றில் அமெரிக்க இராணுவத்தினர் பல வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளனர். அமெரிக்க இராணுவத்தின் US soldiers from Bravo Company of the 3rd Platoon—part of the 5th Stryker Brigade, அணியை சேர்ந்தவர்களே இந்த மனித படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.“கொலை அணி” (The Kill Team) என இவர்களிற்கு அமெரிக்க பயங்கரவாத இராணுவத்தினுள் செல்லப் பெயர் வேறு.
அமெரிக்க இராணுவம் தாக்குதலிற்கு இலக்காகி அல்லது இழப்புகளுடன் தளம் திரும்பும் வேளையில் தங்கள் ஜீப் வண்டியின் பின் கதவை திறந்து பசியுடன் வீதியோரம் நிற்கும் குழந்தைகளை நோக்கி சொக்லேட் மற்றம் இனிப்பு பண்டங்களை புன்முறுவலுடன் வீசுவர். ஆவலுடன் அதை எடுத்து உண்ணும் குழந்தைகள் அவ்விடத்திலேயே புளுவாக துடித்து இறந்து விடுவர். இறந்த குழந்தைகளின் உடலங்கள் மீது ஆப்கானிய முஜாஹிதீன்களிடம் இருந்து கைப்பற்றிய கலஷ்னிகோவ்ப் 47 ரக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவர்.
இந்த அமெரிக்க மனநோய் பிடித்த மனித மிருகங்களிற்கு எதிராக எந்த போர் குற்றமும் வாசிக்கப்படுவதில்லை. மனித உரிமை அமைப்புக்களால் அமெரிக்க அநியாயங்களிற்கு எதிராக செயற்பட முடிவதில்லை. போர் கைதிகள் தொடர்பான ரோம் ஸாசனமும், போர் குற்றம் தொடர்பான ஜெனீவா சாசனமும் அமெரிக்க ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் சப்பாத்துக்கால்களை துடைக்கவே பயன்படுகின்றன.
ஆப்கானிய யுத்தத்திலும் சரி, ஈராக்னிய யுத்தத்திலும் சரி பென்டகன் போரிடும் எதிர் தரப்பை அச்சங்கொள்ளவைக்க இவ்வாறான அமெரிக்க இராணுவத்தின் மனநோயாளிகள் கொண்ட கொலைக் குழுக்களை மெல்ல அனுமதித்தே இருந்தது.
இவர்களிற்கு சிவில் சட்டத்திலும் சரி, கோர்ட் மார்ஷலிலும் சரி எவ்விதமான விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனும் போக்கை கடைப்பிடித்தது பெண்டகன். இப்போது முழு அமெரிக்க இராணுவமும் மனநோயாளிகளாக மாறி வருவது குறித்து பென்டகன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளது.
இந்த அமெரிக்க இராணுவத்தின் எழுதப்படாத பக்கங்களிற்கு ஆப்கானிஸ்தான் ஒரு நல்ல உதாரணம். அமெரிக்க பயங்கரவாத மிருகங்கள் ஈராக்கில் செய்த அநியாயங்கள் தொடர்பில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் பார்ப்போம்.

முள்ளிவாய்காலில் கடாபி

கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபியாவின் கடைசி நகரான சிர்தவுக்குள் போராளிகள் படை செவ்வாய்க்கிழமை நுழைந்தது. அந்த நகரின் கிழக்குப் பகுதி துறைமுகத்தை கைப்பற்றியுள்ளனர். கடாபியின் வசமிருந்த முக்கிய நகரங்களை அங்கு இப்போது ஆட்சி செய்து வரும் தேசிய இடைக்கால அரசின் (என்டிசி) படை கைப்பற்றியுள்ளது இதேவேளை எல்லோ கேக் என்று குறிபிடப்படும் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் லிபியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடாபிபிறந்த நகரமான சிர்தே மட்டும் இன்னும் கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரையும் இப்போது போராளிகள முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் சிர்தேவுக்கு கிழக்கே மத்தியத்தரைக் கடலை ஒட்டி அமைந்த துறைமுகத்தை போராளிகள கைப்பற்றிவிட்டதாக அந்தப் படையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். நகருக்கு வெளியே கடாபிக்குச் சொந்தமான பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். அதிலிருந்துதான் ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இடைகால நிர்வாகத்துக்கு ஆதரவாக நேட்டோ விமானங்களும் குண்டுகளை வீசி வருகின்றன. தூரத்திலிருந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
இறுதி யுத்தம் தீவிரமடைந்திருப்பதால், நகரத்திலிருந்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள சிர்தேவைக் கைப்பற்றிவிட்டால் தங்களைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பொதுமக்கள் அச்சத்துடன் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
லிபியா பெரும்பகுதியை இடைக்கால அரசின் போராளிகள் கைப்பற்றிவிட்ட நிலையிலும், கடாபி எங்கிருக்கிறார் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. அவர் சிர்தே நகரில் பதுங்கியிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டனர். அல்ஜீரியாவுக்குத் தப்பிச் சென்ற அவரது மகள் ஐசா, “எனது தந்தை இறுதிவரை போராடுவார்’ என்று கூறியிருந்தார். இதனால் கடாபி இன்னமும் லிபியாவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சவூதி அரேபியாவில் பெண்களும் வாக்களிக்கலாமாம் !

Saudi Arabia Flagசவூதி அரேபியாவில் அரசாங்க உயர் நிர்வாகங்களை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு வழங்கபடவில்லை அங்கு மன்னர் ஆட்சி நடைபெறும் என்பதால் சிறிய அதிகாரம் குறைந்த அலகுகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கபட்டது அதில் ஆண்கள் பங்குகொள்ளும் நிலை தோன்றினாலும் பங்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை தற்போது பெண்களும் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி முழுவதும் அதன் நிர்வாகம் எங்கும் மன்னர் குடும்பம் என்ற நிலைதான் இருக்கிறது. இஸ்லாத்தின் முக்கிய மக்கா, மதீனா தளங்களை கொண்டுள்ள சவூதி அரேபியா மன்னர் நிர்வாகம் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் தொடரான அழுத்தத்தின் பின்னர் பெண்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமையும்- தேர்தலில் போட்டியிடும் உரிமையும் வழங்கப்படும் என்று மன்னர் அப்துல்லா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முழு விசுவாசியாக இருந்து வரும் அப்துல்லாஹ் நிர்வாகம் உள்நாட்டில் ஓரளவு இஸ்லாமிய நடைமுறைகளை கொண்டிருப்பதால் மக்கள் எழுச்சியில் இருந்து தப்பி வருவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் அப்துல்லாஹ் நிர்வாகம் கடைபிடித்து வரும் வெளிநாட்டு கொள்கை காரணமாக பாரிய எழுச்சி ஏற்பட வாய்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மக்கள் எழுச்சியை தவிர்க்கும் பொருட்டு மன்னர் நிர்வாகம் பல சலுகைகளை அறிவித்துள்ளது அதில் ஒன்று இது என்று சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

saudi execution indonesian maid

பொத்துவிலுக்கான கல்வி வலயம் வேண்டும்

நீண்ட காலமாக பொத்துவில் மக்களின் பொத்துவிலுக்கான கல்வி வலயம் என்ற கோரிக்கை நிறைவேற்றபாடாமல் இழுத்தடிக்க படுவதாக பொத்துவில் பிரதேச கல்வியாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கடந்த வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், கின்னியா, ஓமரங்கடவல ஆகிய மூன்று கல்வி கோட்டங்களும் உப வலயக் கல்வி அலுவலகமாக இயங்கி வந்தன.
இதில் பொத்துவில் தவிர்ந்த மற்ற கோட்டங்களான கின்னியா, ஓமரங்கடவல ஆகிய இரண்டும் வலயக்கல்வி அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையிலும் பொத்துவில் கல்வி கோட்டம் தொடர்ந்தும் கோட்டமாகவே இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பான்

http://thesecretlifeofkat.com/images/uploads/kat_blog_images/famine.jpg
இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)
முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.
அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். “குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.” அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி
ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் முறை கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் “விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் “உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)
இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.