சனி, 31 டிசம்பர், 2011

விபத்துக்கள் அதிகரிப்பு 26 வயது நபர் பலி

விபத்துக்கள் அதிகரிப்பு 26 வயது நபர் பலிமொனராகலை பொத்துவில் பிரதான வீதியில் சிறிகல எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 26 வயதுடய நபர் எனவும் இவர் ஒட்டுகம்மன பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொரியில் மோட்டார் வண்டி மொதுண்டதில் ஏற்பட்ட விபத்திலேயே இந்நபர் இன்று காலை உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

புதன், 28 டிசம்பர், 2011

ஹமாஸ், இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவுதான்: ஹனியா

பலஸ்தீன பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா எகிப்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவு என்று தெரிவிதுள்ளார். -أن حركة حماس لا تخفى انتماءها للإخوان، وأنها تمثل الحركة الجهادية للجماعة.-இப்படி கூறியதன் மூலம் பலஸ்தீன விடுதலை போரில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் காசாவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை ஹமாஸ் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் உள்ள இணைப்பை மறைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார் .Video
எகிப்தின் மக்கள் எழுச்சிக்கு பின்னர் தனது முதல் பயணத்தை மேற்கொண்டு எகிப்து சென்றுள்ளார். அதன் போது மக்களினால் அவருக்கு அமோக வரவேற்று வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது விஜயத்தின் போது எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுளார். கடந்த 2007 ஆம் ஆண்டு காசாவை இஸ்ரேல் முற்றுகை இட்டு தனது முழு அளவிலான தடைகளை விதித்ததை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு பிரதமர் எகிப்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பது இது முதல் முறையாகும்.
காசா பகுதியை கட்டியெழுப்பும் நோக்கில் பிராந்திய நாடுகளிடம் உதவிகளை கோருவதே இந்த சுற்றுப் பயணத்தின் பிரதான நோக்கம் என ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இஸ்மைல் ஹனியான் எகிப்து, சூடான், துனீஷியா, கட்டார், பஹ்ரைன் மற்றும் துருக்கி நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன் முதல் கட்டமாக எகிப்து சென்றுள்ள இஸ்மைல் ஹனியான் நேற்று முன்தினம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர் மொஹமட் பாடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பலஸ்தீன விவகாரம் குறித்து எப்போதும் கரிசணை காட்டி வருகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மொஹம்மத் பாடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இரண்டு கட்ட வாக்கெடுப்புகளிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பு இஸ்ரேலுக்கு குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என ஹமாஸ் முன்னணி தலைவர் ஹனியான் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சலபிகள் அரசியல் கட்சியான அந்நூர் பிரமுகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்பதாக எகிப்து தகவல்கள் தெரிவிக்கின்றது.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

பொத்துவில் முஸ்லிம் விவசாயிகளுக்கு வன இலாகா மீண்டும் தடை

பொத்துவில் கறங்கோவையிலுள்ள விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை ஹஸன் அலி தனது ஆட்சேபனையை எழுத்து மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து நியாயம் வேண்டியுள்ளார்.பொத்துவில் கறங்கோவையிலுள்ள 502 ஏக்கர் விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை விதித்துள்ள விடயம் 21.12.2011ல் காணி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ரீ. ஹஸன் அலி தனது ஆட்சேபனையை எழுத்து மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து நியாயம் வேண்டியுள்ளார்.
அவர் தனது ஆட்சேபனையில் தெரிவித்துள்ளதாவது :
அண்மையில் காணி அமைச்சரவர்கள் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு வருகை தந்து அங்குள்ள விவசாயிகளின் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நன்றி கூறுகின்றேன். அதேவேளையில் அங்கு கறங்கோவை விவசாயிகளுக்கு தற்போது நடந்துள்ள அநியாயத்தினை உங்களது அவசர நடவடிக்கைகளுக்காக முன்வைக்கின்றேன்.
கறங்கோவையில் 1981 முதல் சென்ற போகம்வரை தொடர்ந்து உரிமையுடன் விவசாயம் செய்து வருபவர்களுக்கு தடை விதிப்பதற்காக தற்போது புதுமையான ஒரு காரணத்தை வன இலாகவினர் முன்வைத்துள்ளதாக அறிகின்றேன்.
அண்டைய பிரதேச செயலகப்பிரிவாகிய லகுகலைப்பிரதேசத்துக்கும் கறங்கோவை விவசாயநிலம் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்துக்கும் இடையில் எல்லைப்பிரச்சினை உள்ளதாகவும் அப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் கறங்கோவை விவசாயிகள் தங்களது காணிகளுக்குள் செல்லக் கூடாது என வன இலாகாவினர்; மிகவும் மோசமான முறையில் விவசாயிகளை அவதிக்குட்படுத்தப்படுவதாக முஸ்லிம் விவசாயிகள் எம்மிடம் முறையிட்டுள்ளார்கள்.
எல்லைப்பிரச்சினைக்கும் காணிகளில் பயிர் செய்வதற்கும் முடிச்சுப் போட முடியாது. முஸ்லிம் விவசாயிகள் சிங்களப் பிரதேசமாகிய லகுகலப்பிரதேசத்துக்குள் காணிகளை சொந்தமாக வைத்திருக்க முடியாது என்று சொல்வதைப் போன்ற ஒரு முறையற்ற செயலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பாகும். விவசாயிகளுக்குரிய பொறுப்பாக இதனை திரிவு படுத்தக் கூடாது.
1986ம் ஆண்டு புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டபோது எதேச்சதிகாரமாகவும் தன்னிச்சையாகவும் அப்போதிருந்த அரசு அப்பிரதேசத்தில் முறையான எல்லை நிர்ணயசபையினை அமைத்து காலாகாலமாக வாழ்ந்து வரும் தமிழ்பேசும் மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாமல் பாரபட்சமாக எல்லைகளை வகுத்துக் கொண்டது. இவ்வாறான ஒரு நியாயமற்ற எல்லைப்பிரச்சினைகளை மையமாக வைத்து அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்புரங்களிலுள்ள முஸ்லிம் விவசாயிகளின் உரிமைகளில் அடிக்கடி அரச நிர்வாகம் வௌ;வேறு வடிவத்தில் தலையிடுவதை நான் ஆட்சேபி;கின்றேன்.
கறங்கோவை விவசாயிகளின் உரிமைப்பிரச்சினை ஏற்கனவே உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப் பட்டதாகும்.
சமாதான உடன்படிக்கையின் பின்னர் இவ்விவசாயிகள் காணிகளை 2003ல் மீண்டும் செய்கை பண்ண முற்பட்ட வேளையில் வன இலாகாவினர் ஏற்கனவே இதுபோன்ற ஒரு தடையை விதித்த போது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டது. அதன் பின்னர் அப்போதிருந்த அமைச்சர்கள் அரசாங்க அதிபர்; பொலிஸ் உயர் அதிகாரிகள் நில அளவையாளர்கள் விவசாய அலுவலர்கள்ää வனவிலங்கு உயர் அதிகாரிகள்ää பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் அவ்வப்போது கறங்கோவை காணிக்குள் சென்று பார்வையிட்டதன் பின்னர் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அரச அதிபரின் பணிப்புரைக்மைய இக்காணிகள் நில அளவை செய்யப்பட்டு 502 ஏக்கர் காணியை முஸ்லிம் விவசாயிகளுக்கு வழங்குவதென முடிவும் எடுக்கப்பட்டது.
12.12.2006ல் அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் காணி உத்தரவுப் பத்திரங்கள் பல்வேறு காரணங்களினால் கைவசம் இல்லாதவர்களுக்கு விசாரணை செய்து புதிதாக வழங்குவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதற்கமைய பொத்துவில் பிரதேச செயலாளரினால் ஏற்கனவே 96 பேருக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டும் உள்ளது.
உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் மீண்டும் புதிய உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்படும் போதுää கையொப்பம் இட வேண்டியது லகுகல பிரதேச செயலாளரா அல்லது பொத்துவில் பிரதேச செயலாளரா என்ற ஒரு புதிய பிரச்சினையை முன்வைத்து விவசாயிகள் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள
ஏற்கனவே சுமார் 300 ஏக்கர் நிலம் உழுவப்பட்ட நிலையில் மேலும் விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதென்பதனை திட்டமிட்ட பழிவாங்கலாகவே விவசாயிகள் கருதுகின்றனர்.
எனவே அமைச்சரவர்கள் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு அவசரமாக தீர்வை வழங்க வேண்டும் என்று ஹசன் அலி தனது ஆட்சேபனைக்; கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்”
இக்கடிதத்தை சென்ற 21ம் திகதி வரவு செலவுத்திட்ட விவாதத்தின் இறுதி நாளன்று அமைச்சர் ஜனக பண்டார தென்ன்கோனிடம் பாராளுமன்றத்தில் வைத்து நேரடியாக ஒப்படைத்து மேலும் பல விளக்கங்களை அளித்ததாகவும் அவர் கூறினார்
முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்துக்கு உடனடித் தீர்வை வழங்க வேண்டும் என்றும் எடுத்துரைத்ததனால்; அவசரகவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் பறிபோன காணிகளை மீட்டெடுப்பதற்கும் தற்போது பாவனையில் உள்ள காணிகளை மேலும் பறிபோகாமல் காப்பாற்றுவதற்கும் ஒரு பொதுவான செயல் திட்டத்தினை அனைத்து அரசியல் சக்திகளும் ஒருங்கிணைந்து முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.
அரசியல் தீர்வு பற்றி அக்கறை செலுத்தப்படும் இக்காலக்கட்டத்தில் நாம் காணி விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுடன் பிரதேச சபை மட்டத்தில் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 2007ம் ஆண்டு அரசாங்கத்தை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியதற்கும் இந்த பொத்துவில் காணிப்பிரச்சினை ஒரு முக்கிய காரணியாக இருந்ததனை நாம் நினைவு கூர்ந்துக் கொள்ள வேண்டும்

புதன், 21 டிசம்பர், 2011

கிழக்கு முஸ்லிம்கள்பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி

கிழக்கு முஸ்லிம்களை நோக்கி பிரபல ஆங்கில ஊடகங்களும் புலி சார்பு ஊடகங்களும் திட்டமிட்டு சதிவலைகளை பின்னுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளும், அனைத்துலக தீவிரவாத அமைப்புகளும் இதற்கு உதவி வருவதாகவும் ஆங்கில செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது. அதை தூக்கிப்பிடித்துகொண்டு புலி சார்பு ஊடகங்க வரிந்து கட்டுகின்றன.
இதில் வேடிக்கையானதும் வேதனையானதுமான விடயம் என்னவென்றால், இந்த பொய் செய்திக்கு தூபம் இட்டவர் தன்னை முஸ்லிம்களின் பிரதிநிதி என்று காட்டிக்கொள்ளும் இலங்கையின் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா. இவரை மேற்கோள்காட்டியே ஆங்கில நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜிகாத் அமைப்பின் நிதியுதவியுடன் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கிழக்கிலுள்ள சுபி முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் சந்தித்து முறையிடப் போவதாகவும் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
மக்கள் உண்மையான இஸ்லாத்தை தெளிவாக பின்பற்றுவதை பொறுக்கமுடியாத அலவி மௌலானா இப்படி வரிந்து கட்டிக்கொண்டு தனது சொந்த சமூகத்தின் மீதே சேறு பூசுவதை மேற்கொள்கின்றார்.
வழிகேட்டிலிருந்து மக்கள் தெளிவுபெருவதை விரும்பாத இவர் தனது குற்றச்சாட்டில் கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சுபி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்த ஆயுதக்குழுக்கள் முனைவதாகவும், வகாபி இஸ்லாமிய பாடசாலையை பின்பற்றும் இந்த ஆயுதக்குழுக்கள், சுபி முஸ்லிம்களின் மசூதிகளையும், வழிபாட்டு இடங்களையும் தாக்குவதாகவும் புதிய கதையை கட்டிவிட்டுள்ளார்.
இந்த கதைகளுக்கு தலையும் வாலும் வைத்து ஆங்கில பத்திரிகையும் புலிசார்பு இணையமும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குழுக்களுக்கு பல மத்திய கிழக்கு நாடுகள் நிதியுதவி செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் வறுமையில் உள்ள சில முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஆயுதக்குழுக்களில் இணைகிறார்கள். இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து போரிடுவதற்குக் கூட அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த கப்சாவில் கதை கட்டப்பட்டுள்ளது.
இந்த பொய்யுரையில் தெளிவாக திட்டமிட்டு காத்தான்குடியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாத எமது சமூக காவலன் (?) அலவி அலவி மௌலானா காத்தான்குடியை கோர்த்து விட்டுள்ளார்.

புதன், 14 டிசம்பர், 2011

பொத்துவில் கல்விக் கோட்டத்துக்கு 54 ஆசிரியர்கள் இடமாற்றம்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் ஆசிரியர் சமமின்மையை போக்க அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய கல்விக்கோட்டங்களில் இருந்து பொத்துவில் கல்விக் கோட்டத்துக்கு 54 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெவித்துள்ளார்.
அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் இருந்து 27 ஆசிரியர்களும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட த்தில் இருந்து 27 ஆசிரியர்க ளும் பொத்துவில் கல்வி கோட்ட த்துக்கு இ மாற்றப்பட்டுள்ளதாகவு ம் தெவித்தார்.
54 ஆசிரியர்களுக்கு நியம கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வு இம் இட மாற்றப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெவித்தார். இவ் இடமாற்றம் அடுத்த வருடம் (2012) ஜனவ மாதம் 2 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெவித்துள்ளார்.
அதேவேளை இன்று காலை தூர பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையை கண்டித்து, அம்பாறை மாவட்டத்தின் பெண் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் . இந்த ஆர்ப்பாட்டம் கல்முனையில் இடம்பெற்றது.

திங்கள், 12 டிசம்பர், 2011

உளவு விமானத்தை திருப்பித் தரமுடியாது:ஈரான்

நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது’ என, ஈரானின் புரட்சிப் படை உறுதியாகதெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ., தொலைவில் ஈரானுக்குள், அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது. அது தொடர்பான வீடியோ வையும் ஈரான் வெளியிட்டது
இந்நிலையில், ஈரானின் புரட்சிப் படை துணைத் தளபதி ஹுசைன் சலாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது, போரைத் தூண்டும் நடவடிக்கை. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை’ என தெரிவித்துள்ளார் .ஆர்.க்யூ.,-170 ரக ஆளில்லா போர் விமானம் ஒன்று காணாமல் போனதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிகாரிகள், அந்த விமானத்தை சுட்டோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமோ, கணினி தொழில்நுட்பம் மூலமோ ஈரான் தரையிறக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 5 டிசம்பர், 2011

ஈரான் அமெரிக்காவின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது

ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி தெரிவித்துள்ளது . இது தொடர்பாக கருத்துரைத்த அமெரிக்க அதிகாரிகள் தமது ஆளில்லா உளவு விமானம் ஒன்றை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர் . கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரின் வான் பரப்பில் அத்துமீறி இழவு பார்த்த அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிதாகவும் அமெரிக்க ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு பிரிட்டனும் ஆதரவு தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து ஈரானில் உள்ள இங்கிலாந்து தூததை வெளியேற்ற பாராளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார் இந்நிலையில் ஈரானின் வடக்குப்பகுதியில் உள்ள இராணுவத்தின் விமான தளத்தினை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமான R.Q.-170 விமானம் அத்துமீறி நுழைந்து உளவு பாத்து வாங்கி கட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

வியாழன், 24 நவம்பர், 2011

ஈராக் ஆக்கிரமிப்பு:புஷ்ஷும், ப்ளேயரும் குற்றவாளிகள் என மலேசிய தீர்ப்பாயம்

ஈராக்கை ஆக்கிரமிக்கும் வேளையில் போர் குற்றங்களை புரிந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷும், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரும் குற்றவாளிகள் என மலேசியாவின் போர் குற்றத்திற்கான தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.
இதுக்குறித்து தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஆக்கிரமிப்பிற்கு தலைமை தாங்கியதன் மூலமாக இருவரும் இனப் படுகொலையையும், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்துள்ளனர். சட்டத்தையும், நீதியையும் பார்வையாளராக மாற்றிவிட்டு ஆக்கிரமிப்பு ராணுவம் ஈராக்கில் கூட்டுப் படுகொலையை நடத்தியுள்ளது.
பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.’ என கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பாயம் கண்டறிந்தவற்றை சர்வதேச க்ரிமினல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். போர்க் குற்றவாளிகள் பட்டியலில் ஜார்ஜ் புஷ்ஷையும், டோனி ப்ளேயரையும் உட்படுத்தவேண்டும் என நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

இலங்கை குழு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியுள்ளது

ரிஸானாவின் விடுதலை தொடர்பாக சவூதி உயர்மட்டத்தினரைச் சந்திக்க சென்றுள்ள இலங்கைக் குழு இக்குழு ரியாத்தில் மரணமுற்ற குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியுள்ளதுடன். ரியாத்தில் இருந்து 380 கிலோமீற்றர் தூரத்திலுள்ள Dawadmi மாநிலத்துக்குச் சென்று மரணித்த குழந்தையின் நெருங்கிய குலத் தலைவர்களைச் சந்தித்தது ரிஸானாவை எந்த வகையிலாவது விடுதலை செய்யுமாறு இக்குழு கேட்டுக் கொண்டுள்ளது .
இக்குழுவில் சென்றிருந்த ஆளுநர் எஸ். அலவி மெளலானா மரணித்த குழந்தையின் உறவினர்களின் காரங்களைப் பிடித்து கண்ணீர் மல்கிய நிலையில் ரிஸானாவை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தவ்பீக், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிஸங்க விஜேரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதி செயலாளர் ஐ. எம். அன்ஸார், மெளலவி தாசிம் மெளலவி சரூக், ஐ. ஆர். ஓ. பிரதிநிதி இம்ரான் ஜமால்தீன் ஆகியோரும் குழுவில் இடம்பெறுகின்றனர்.
இதேவேளை சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கின் வழக்கு விசாரணை பிராந்திய நீதிமன்றத்தில் இருந்து மன்னரின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று சவூதி அரேபியா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் அங்கிருந்து நேற்று அறிவித்துள்ளார்.

வியாழன், 10 நவம்பர், 2011

இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் திட்டம்

அமெரிக்காவின் ஒபாமா நிருவாகம் ஈரான் மீதான திடீர் தாக்குதலிற்கு இஸ்ரேலிய அரசிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம், சதி நாச முயற்ச்சி போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தமது ஊடக ஊதுகுழல்கள் மூலம் தொடர்ச்சியாக சொல்வதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை இதற்கு பெற்றுக்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. அமெரிக்க இராஜாங்க செயலக மிக முக்கிய அதிகாரி ஒருவரால் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் நிராகரிக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ள ஜேர்மனிக்கும் ஈரானிற்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் இஸ்ரேலிய அரசிற்கு கவலை தரும் விடயமாக மாறியுள்ளது. ஈரானிய அனுச்செறிவூட்டலிற்கு ஜேர்மன் ஆதரவளிப்பதுடன் அதை துரிதப்படுத்த முற்படுமானால் உலக அரங்கில் ஈரான் அனு ஆயுத வல்லமையுடைய தேசமாக மாறுவதுடன், ஜேர்மனியும் ஈரானிய ஏவுகணைத்தொழில் நுட்பத்துடன் வல்லரசாக உருவாகும். இவ்விரு நாடுகளின் இராணுவ வளற்ச்சி இஸ்ரேலிற்கும் அமெரிக்காவிற்கும் பெரும் பின்னடைவுகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உருவாக்கவல்லன.
கடந்த ஒக்டோபர் 03ல் டெல்அவிவிற்கு விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு செயலர் Leon Panetta லியோன் பெனேட்டா இது குறித்து இஸ்ரேலிய பிரதமருடனும், பாதுகாப்பு அமைச்சருடனும் தொடரான 5 மணித்தியால உரையாடலை மேற்கொண்டுள்ளார்.
ஈரான் மீதான திட்டமிட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை எப்படி நடைமுறை படுத்துவது என்பது தொடர்பாக அமெரிக்க சீ.ஐ.ஏ. அமைப்பானது பல ஒழுங்கமைக்கப்பட்ட திட்டங்களை வகுத்துள்ளது. இவற்றை கூலிக்கு வேலை செய்யும் மூன்றாம் தரப்பு ஏஜென்ட்கள் மூலம் நிறைவேற்றுவதன் ஊடாக ஈரான் மீதான பயங்கரவாத மற்றும் சதிமுயற்ச்சி குற்றச்சாட்டுக்களை உலக அரங்கில் உண்மையென காட்டி ஐ.நா.சபையில் கொண்டு வரும் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஈரானை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் நாடகம் தெளிவாகிறது.
இதற்கு முன்பும் ஈரானை தாக்க பல முனைப்புகளுடன் தயார்படுத்தல்கள் செய்யப்பட்டபோது அவை கைகூடவில்லை. இறுதியாக ஒக்டோபர் முதல் வாரத்தில் தாக்குதல் நிகழ்த்துவது என தீர்மானிக்கப்பட்டது. 10 நாட்கள் தொடர் தாக்குதல் நிகழ்த்துவதன் மூலம் ஈரானை நிர்மூலம் செய்யும் திட்டம் தயார்படுத்தப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன தேச விவகாரம் அமெரிக்க கைகளை விட்டு வேறு திசைகளில் நகரும் அபாயம் காணப்பட்டதும், ஜேர்மனி பலஸ்தீன எல்லை 1931ல் உள்ளது போல் இருக்க வேண்டும் என கூறியதும் ஸியோனிஸ மற்றும் அமெரிக்க கூட்டு தாக்குதலை தாமதப்படுத்தியது. இப்போது இஸ்ரேல் ஊடாக அமெரிக்கா தனது இலக்கை அடையப்பார்க்கிறது.
சரிந்துள்ள பொருளாதாரத்தின் காரணமாக வோல் ஸ்டீரீட் மக்கள் எழுச்சியை திசை திருப்ப இவர்கள் ஈரான் யுத்தத்தை பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஜேர்மனிய ஈரானிய இராணுவ கூட்டிற்கு முன்னதான தாக்குதலே இஸ்ரேலை பாதுகாக்கும் என்பது இவர்களது எண்ணம். சவுதி இராஜதந்திரி Saudi Ambassador Adel al-Jubeir மீதான தாக்குதல் தொடர்பான அமெரிக்க நாடகம் அமெரிக்க அரசியல்வாதி ஜோன் மெக்கெய்ன் John McCain வாய்வழியாக அம்பலமானது வேறு விடயம்.

அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை

அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை” என ஈரானின் ஜனாதிபதி அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிக்கும் சக்தியை நிலையை நெருங்கி விட்டதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலின் பின்னணியில் ஈரான் ஜனாதிபதி நஜாதின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் அவரின் அறிகையில் இதர நாடுகளை வறுமையில் உழலச்செய்து அவர்களுடைய சொத்துக்களை ஏப்பமிட்டு அமெரிக்கா தனது சொந்த செல்வ செழிப்பை உறுதிச்செய்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அங்கீகரிக்க முடியாது.
அணு ஆயுதமற்ற உலககை தோற்றுவிக்க அமெரிக்கா ஈடுபாடு காட்டவில்லை, தன்வசம் இருக்கும் அணுகுண்டுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா 81 பில்லியன்- $81 billion- அமெரிக்க டொலர்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ளது ஆனால் ஈரான் முழு ஆண்டுக்குமான அணு ஆய்வுக்காக செலவாக வெறும் 250 மில்லியனை-merely $250 million- மட்டும் ஒதுக்கியுள்ளது.
சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் தலைவர் யூகியோ அமானோ அமெரிக்காவின் பொம்மை. மேற்க்கு சக்திகளின் அணு ஆயுதங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்யாத சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அமெரிக்கா வசம் 5000 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது. ஈரானின் அணுசக்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தயார் செய்துள்ள அறிக்கை பொய்யான காரணங்களின் பின்னணியை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளிடன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வம் அல்லாத அறிக்கையின் வாதத்தில் உறுதியாக இருந்தால் அதனை விரைவாக வெளியிட வேண்டும் என ஸலாஹி சவால் விடுத்துள்ளார்

திங்கள், 31 அக்டோபர், 2011

பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்


பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது.
பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன.
ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர்.
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர்.
அமெரிக்க விருப்பத்தை மீறி பாலஸ்தீனத்தை யுனெஸ்கோ சேர்த்துக்கொண்டுள்ளதால், யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியில் ஏழு கோடி டாலர்களை அது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கச் சட்டம் ஒன்று சொல்கிறது.
இத்தொகை யுனெஸ்கோவுடைய மொத்த நிதியில் பாதிக்கும் அதிகம் ஆகும்.

இஸ்ரேல் எதிர்ப்பு

யுனெஸ்கோவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்புகளை பாதிக்கும் என்று இஸ்ரேல் கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த வாக்கெடுப்பானது, சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையை முன்னுக்கு கொண்டுசெல்ல எடுக்கும் முயற்சிகளை நிராகரிப்பதற்கு ஒப்பானது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

கவிஞர் பொத்துவில் அஸ்மின் தேசிய விருது பெற்றார்

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.
இயக்குனர் கேசவராஜ் இயக்கும் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்.
ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.
இயக்குனர் கேசவராஜ் இயக்கும் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்.
ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கிழக்குத் துருக்கியை உலுக்கிய பாரிய பூகம்பம்


வான் நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து பலர் காயமுற்றதுடன் நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஜீ. எம். டி. நேரம் 10:41 அளவில் ஏற்பட்ட இப்பூமி அதிர்ச்சி 7.2 ரிச்டர் அளவுடையது என் ஆரம்ப ஆய்வுகள் கூறுகின்றன. வான் நகரின் வடக்கே அமைந்துள்ள தபனில் கிராமம் இதன் மையப் புள்ளியாக அமைந்திருந்தது.
துருக்கியின் கந்தில்லி ஆய்வகத்தின் மதிப்பீட்டின்படி 500 முதல் 1000 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு பாதிப்பு ஈரான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஏர்சிஸ் நகர்ப்புறத்துக்கே ஏற்பட்டுள்ளதுடன் வான் நகரமும் கணிசமான பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளது.
பிரதிப் பிரதமர் பசீர் அதலே கருத்துத் தெரிவிக்கையில் வான் நகரில் 10 கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் ஏர்சிஸ் பகுதியில் 25 அல்லது 30 கட்டடங்கள் சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Anatolia செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி வான் நகரில் ஐம்பது பேராவது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
NTV ஒளிபரப்பு நிறுவனத்துடன் பேசிய எர்சிஸ் நகர மேயர் சுல்பிகார் “அதிக கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன, அதிகமானோர் பலியாகியுள்ளனர், சரியான எண்ணிக்கை தெரியவில்லை, நாங்கள் அவசர உதவிக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
முழு சேதத்தை மதிப்பிடுவதில் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். NTVயுடன் பேசிய வான் நகர மேயர் பெகிர் கயா “மக்கள் பதற்றமடைந்துள்ளனர், தொலைத்தொடர்பு சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன, யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றார்.
இராணுவம் தேடுதல் மற்றும் மீட்புப் படையணிகளை அனுப்புவதற்காகத் தயாராகி வருகிறது. புவியதீர்வைத் தொடர்ந்த சிறிய அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
வட மேற்கு ஈரானின் துருக்கியுடனான எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்ட இப்பூமி அதிர்ச்சி பிரதான நகரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புவித்தட்டுகளின் எல்லைக் கோடுகள் துருக்கியின் ஊடாகச் செல்வதால், சிறிய பூமி அதிர்வுகள் நாளாந்த நிகழ்வுகளாக இருப்பினும் 1999இல் இடம்பெற்ற இரண்டு பாரிய பூமி அதிர்ச்சிகள் வடமேற்குத் துருக்கியில் 20,000 க்கும் அதிகமானோரை பலிகொண்டிருந்தன. கடந்த மே மாதம் இதே பகுதியில் சிமாவில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியில் இருவர் பலியானதும் 79 பேர் காயமுற்றதும் குறிப்பிடத்தக்கது.

சனி, 22 அக்டோபர், 2011

சவுதி முடிக்குரிய இளவரசர் சுல்தான் காலமானார்

சவுதி முடிக்குரிய இளவரசரும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருமான சுல்தான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
உடல் நலம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த அ‌ப்து‌ல் அ‌சி‌ஸ் அ‌ல் சவு‌த் மரு‌த்துவமனை‌யி‌ல் அனு‌ம‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சிகிச்சை பலனின்றி அ‌ப்து‌ல் அ‌சி‌ஸ் இ‌ன்று காலமானார். அவரது மறைவு‌க்கு ப‌ல்வேறு நா‌ட்டு தலைவ‌ர்க‌ள் இர‌ங்க‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
சுல்தான் அவர்கள் 1962 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றதில் இருந்து சவுதியில் முடிவெடுக்கும் ஒரு மைய புள்ளியாக செயற்பட்டார்.
மன்னர் அப்துல்லா இப்போது புதிய முடிக்குரிய இளவரசரை நியமிக்க “Allegiance Council” என அழைக்கப்படும் “விசுவாசம் கவுன்சில்”ஐ அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது துணைப் பிரதமரும் உள்துறை மந்திரியுமான இளவரசர் நைப் (Naif) அவர்களின் பெயர் இதற்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசுவாசக் கவுன்சிலானது 2006 இல் அப்துல்லா அவர்கள் மன்னரானபோது ஆரம்பிக்கப்பட்டது. இதன் முக்கிய செயற்பாடாக மன்னருடைய தெரிவை அல்லது பரிந்துரை செய்யப்படும் ஒருவரை முடிக்குரிய இளவரசராக அங்கீகரிப்பதாகும்.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

உங்களிடம் செல்போன் (Mobile Phone) இருந்தால் அவசியம் இதை படியுங்கள்


உங்களிடம் செல்போன் (Mobile Phone) இருந்தால் அவசியம் இதை படியுங்கள்

-முஹம்மத் ஆஷிக்-
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற – உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட – அதிவேக வளர்ச்சியுற்ற – அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் ‘கைபேசி’ உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.
ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field)  அருகிலிருக்கும் மொபைல் (Base Station – 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station  – 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை ‘ஓகே’ செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.
The impact of cell phone radiation on humans..! & How to overcome it carefully..!
பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல்ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவு அலைக்கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!
ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இது 1.6 W/KG (watts per kilogram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது  எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது.
நம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம்.
  1. உங்கள்  செல்ஃபோனின் கையேடு ( user’s manual) மூலம்.
  2. செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
  3. செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து  இந்த தளம் மூலமாக.
நீண்ட நேரம் செல்ஃபோனை ‘ அணைத்த கையும் காதுமாய் ‘ கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு ‘மொபைல் பேச்சாளரின்’ முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது.
நீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு… மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.
தொடர்ந்து இதேபோல ‘அணைத்த கையும் காதுமாய் ‘ செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம்.
ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல்கொண்டு போய் விடுகிறதாம்..!இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, ‘அந்த அளவுக்கெல்லாம்… அப்படியெல்லாம்… ஒன்றும் ஆகாது’ என்று இன்னொரு சாரார்… (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக…?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து “ஆமாமாம்… அந்த சாரார் சொன்னதே சரி”-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா ..!
‘மொபைல்  அடிமைகள்’ ஆகிவிட்ட நம்மால், இதை எல்லாம் கண்டு பயந்து மிகவும் அரிய அவசிய கண்டுபிடிப்பான… இந்த செல்ஃபோனை “இனி வேண்டாம்” என தூக்கி எறிந்து விட முடியுமா..? முடியவே முடியாது அல்லவா..?
எனில், இறைநாடினால், மாற்று வழிகளை கைக்கொண்டு மேற்படி பயங்கர விபரீதத்திலிருந்து தப்பிப்போம்..! அதுவே புத்திசாலித்தனம்..!
இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது ‘ear phone’ என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்… அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது…? அதை காணவில்லையா…? சரி…வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..!   ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?
 அதுவரை என்ன செய்யலாம்…? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னாவிலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே  செல்லாதவாறு பிடித்து பேசுங்கள்.  அப்புறம் ‘Speaker Phone’ என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் ‘Speaker Phone’ உபயோகித்தும் பேசலாமே..! 
‘டவர் சிக்னல் வீக்’ என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே… சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.
‘பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்’ என்றால், இருக்கவே இருக்கே லேண்ட்லைன்..! அதை உபயோகியுங்கள்..! எந்த பயமும் இல்லை… முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே…!
இனி… மொபைல்  சோதனைகளை எல்லாம் கடந்து அதன் மூல

சர்வாதிகார கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்

 லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான்.
இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள். லிபியா இன்னொரு ஈராக்காக , ஆப்கானிஸ்தானாக , ஏன் இன்னொரு பாகிஸ்தானாக மாறினாலும் மக்கள் விரும்பும் இஸ்லாமிய புரட்சி தூரமான கனவாகிவிடும். துனூசிய எழுச்சி, எகிப்திய எழுச்சி இரண்டிலிருந்தும் இது வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும்  காட்சிகள்
உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபியின் மகன் முஹ்தசிம் கொல்லப்பட முன்னர்
கடாபியின் மக்களில் அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டு வந்த சைபுல் இஸ்லாம் என்ற மகன் தப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவரை மேற்கு ஏகாதிபத்தியம் பாதுகாத்து தேவையான போது தமக்கு சாதகாமாக பயன்படுத்தப்போகின்றதோ  ? தெரியவில்லை.

வியாழன், 20 அக்டோபர், 2011

முஅம்மர் கடாபி கொல்லப்பட்டார்


சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லிபிய முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக லிபிய புரட்சிப் படைகளின் தளபதி அப்துல் ஹக்கீம் பெல்ஹஜ் உருதிப்படுத்தியதாக அல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கடாபி அவர்கள் சிர்டே நகரில் ஏற்பட்ட சண்டையில் புரட்சிப் படையிடம் சிக்கி பின்னர் காயம் காரணமாக இறந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இறந்த முவாம்மர் கடாபியின் உடல் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரகசியமான ஒரு இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக புரட்சிப் படையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடாபியின் உடல் தங்களிடம் தற்பொழுது இருப்பதாகவும் அதை காரிலே இரகசியமான ஒரு இடத்திற்கு எடுத்துச்செல்வதாக புரட்சிப் படையின் அதிகாரி முகம்மத் அப்தல் கபி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
முன்னதாக புரட்சிப் படை அதிகாரி ஜமால் அபூ ஸாலெஹ் முக்கிய தலைவர் பிடிபட்டதாக அல்ஜசீராவிடம் தெரிவித்தார். அதேநேரம் “அவர் பிடிபட்டுவிட்டார். அவரது இருகால்களிலும் காயம்பட்டிருக்கிறது,” என்று இடைக்கால அரச அதிகாரி அப்டல் மஜித் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். வண்டியில் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முவாம்மர் கடாபி இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார், ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
சிர்டே நகரை கைப்பற்றியபோது முவாம்மர் கடாபியின் முன்னால் பேச்சாளர் மூஸா இப்ராகிமும் கைது செய்யப்பட்டதாக புரட்சிப் படைஅதிகாரி தெரிவித்தார்.
அல்ஜசீராவில் பதிவு செய்யப்பட்ட படம்

அல்ஜசீராவில் பதிவு செய்யப்பட்ட படம்

புதன், 19 அக்டோபர், 2011

மனிதனாக வாழ வழிகள்

மனித வாழ்க்கை ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறைகள், மற்றும் அவர்களது சிந்தனைகளை பொறுத்து வித்தியாசப்படும்.இருந்தபோதும், ஒரு மனிதன் எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்று உலகின் பல்வேறு நெறிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வகையில் மனிதனாக வாழ வழிகள் எனும் பின்வரும் அறிவுரைத் தொகுப்பு வாசகர்களுக்காக வழங்கப்படுகின்றது.

திங்கள், 17 அக்டோபர், 2011

பயங்கரவாத சதித்திட்டங்களை தீட்டுகிறது என்ற குற்றச்சாட்டில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிடுகிறது


புதன்கிழமையன்று, வெள்ளை மாளிகை தான் புதிய சுற்றுப் பொருளாதாரத் தடைகளை ஈரானுக்கு எதிராக சுமத்துவதாக அறிவித்தது; துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் வாஷிங்டனில் சௌதி தூதரைப் படுகொலை செய்ய இருந்ததாகக் கூறப்படும் திட்டம் பற்றிக் கேட்கப்படுகையில் “அனைத்து விருப்பங்களும் மேசை மீது உள்ளன” என எச்சரித்தார்; இது இராணுவத் தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்பையும் தெரிவிக்கிறது.
ஈரானின் முதல் தனியார்மய விமான நிறுவனமான Mahan Air அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளில் புதிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. இது 12நாடுகளுக்கு விமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இந்த விமான நிறுவனம் ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புக் குழுவினரின் உறுப்பினர்களை “இரகசியமாகப்” பல இடங்களுக்கு அனுப்பவதில் ஈடுபட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் முயற்சி என்று இத்திட்டம் பற்றி குற்றம் சாட்டப்படுவதை வாஷிங்டன் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு,ஈரானிடம் இருந்து வருவதாகக் கூறப்படும் தெளிவற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக உலகந்தழுவிய பயண எச்சரிக்கையை வெளியிட்டதுடன்,அமெரிக்காவிற்குள் தாக்குதல்கள் நடத்தப்படுவதும் சாத்தியமே என்று எச்சரித்துள்ளது.
வாஷிங்டனில் செவ்வாயன்று இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் எனப்படும் சதித்திட்டம் பற்றி அமெரிக்கத் தலைமை அரசாங்க வக்கீல் எரிக் ஹோல்டர் பகிரங்கமாக அறிவித்தார். நீதித்துறை கொடுக்கும் தகவலோ அதிகம் நம்பிக்கை தராத தளத்தைக் கொண்டுள்ளது; இதில் டெக்சாஸில் இருந்து மெக்சிகோவிற்கு சென்ற பழைய கார்கள் விற்பனையாளரும்,ஈரானிய-அமெரிக்கருமான Manssor Arbasiar என்பவர் சௌதி தூதர் அப்டல் அல்-ஜுபீரை வாஷிங்டனில் பெயரிடப்படாத ஒரு ஹோட்டலில் வைத்துத் தகர்த்துவிடும் படுகொலைத் திட்டத்திற்காக மிகவும் அஞ்சப்படும் போதைபொருள் கடத்தல்குழு Los Zetas ஐ நாடுவதற்கு முயற்சி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் மற்றொரு திரித்தல் லாஸ் ஜேடாஸின் பிரதிநிதி என்று கூறப்படுபவரும் அர்பசியரை தொடர்பு கொண்டவரும் DEAஎனப்படும் அமெரிக்கப் போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்திற்கு இரகசியத் தகவல் கொடுப்பவர் என்பதாகும்.
செவ்வாய் செய்தியாளர் கூட்டத்தில் FBI இயக்குனர் ரோபர்ட் முல்லர் அரசாங்கத்தின் நிகழ்வு பற்றிய செய்தி “ஹாலிவுட் திரைப்படக் கதையிலுள்ள பக்கங்களைப் படிப்பது போல் உள்ளது” என்று ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.
அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் கூறினார்: “கருத்து என்னவென்றால் அவர்கள் ஒரு மெக்சிக்கோ நாட்டு போதைக் கும்பலை நாடி கூலிக்குச் சௌதித் தூதரைக் கொலை செய்ய முற்படுவர் என்பது; இதை யாரும் நம்ப மாட்டார் என நினைக்கலாம் அல்லவா, சரிதானே?”
இப்பிரச்சினைதான் இந்த முழு விவகாரத்திலும் எழுந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் பலமுறையும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்னும் நடவடிக்கைப் போக்கில் “தயாரிக்கும்” சதித்திட்டம் பற்றிய குறிப்புக்களில் காணப்படும் அனைத்துக் கூறுபாடுகளும் இதில் உள்ளன; அமெரிக்க நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் முன் உண்மையில் இராத பயங்கரவாதத் திட்டங்களில் ஏதும் செய்ய இயலாத தனிநபர்களை பொறியில் தள்ளுவதற்கு இரகசிய முகவர்களைப் பயன்படுத்துதல் என்பதே அது.
ஆனால், இந்த விவகாரத்தில், திட்டம் எனக் கூறப்படுவது ஒரு சில தனிநபர்களை ஈடுபடுத்துவது என்று மட்டும் இல்லாமல் 75 மில்லியன் மக்கள் அதன் அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்ட நாடும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது; இது ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைவிட மிகக் கூடுதலான பேரழிவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட போருக்கு அரங்கை அமைக்கும்.
இத்திட்டம் தொடர்பாக பெயரிடப்பட்டுள்ள ஒரே மற்றொரு நபர் கோலம் ஷகுரி என்பவர்; இவர் Quds Brigade எனப்படும் 150,000 பேர் அடங்கிய ஈரானியச் சிறப்புப் படைகளின் புரட்சிப் பாதுகாப்புப் பிரிவில் ஓர் உறுப்பினர் ஆவார்.
தேசிய பாதுகாப்பு இரகசியம் என்னும் பெயரில் இந்த விவகாரத்தை வைப்பதற்கு அரசாங்கம் கொடுக்கும் சான்று மிகவும் பலவீனமான தன்மையைக் கொண்டுள்ளது; அச்சான்றுகளில் எதுவும் ஈரானிய அரசாங்கம் தீட்டியதாகக் கூறப்படும் சதித்திட்டம் பற்றி எந்த நேரடித் தொடர்போ அது பற்றிய தகவல்களோ குறிக்கப்படவில்லை. இந்த விவரங்கள் அனைத்துமே அர்பப்சியர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இருந்து வெளிவந்துள்ளன; அவரோ ஒரு முன்னாள் வணிகக் கூட்டாளியால்“கவரப்படுபவர்….சற்று சோம்பேறியானாலும்”, “பெரிய திட்டம் தீட்டமுடியாதவர்” என்றுதான் இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும்கூட, புதன்கிழமையை ஒட்டி அமெரிக்க அதிகாரிகள், “பெயர் கூறக்கூடாது என்ற நிபந்தனையில்”, ஈரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி சௌதி தூதரைக் கொலை செய்யும் திட்டம் பற்றித்“தெரிந்திருக்கக் கூடும்” என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
இத்தகைய தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்றுதான் எளிதில் அமெரிக்கப் பெருநிறுவனச் செய்தி ஊடகம் கருதுகிறது; ஏற்கனவே இது ஈரானிய அரசாங்கம் மீது குற்றம் சாட்டி, விசாரணை நடத்தி தண்டனை சுமத்தப்படுவதற்குத்தான் காத்திருக்கிறது. நல்ல பயிற்சி பெற்ற CIAசொத்துக்கள், CNN இன் வுல்ப் பிளிட்சர் போன்றவர்கள் இந்த விவகாரத்தைப் பற்றி ஆர்வத்துடன் பேசி அரசாங்கத்தின் குற்றங்களைப் பெரும் களிப்புடன்,ஏதோ நிரூபிக்கப்பட்டுவிட்டது போல், ஆதரவைக் கொடுக்கின்றனர்.
செய்தி ஊடகம் இதை எதிர்கொண்டுள்ள விதம் ஈராக்கிற்கு எதிரான போருக்கு வழிவகுத்ததில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்த “பேரழிவு ஆயுதங்கள்” தொடர்பான நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்களுக்குக் காட்டப்பட்ட விளைவில் இருந்து மாறுபடாத தன்மையைத்தான் இவை இயல்பாகக் கொண்டுள்ளன என்பதைத்தான் நிரூபிக்கிறது. செய்தி ஊடக நடைமுறை மீண்டும் போர்ப் பிரச்சாரத்தின் தேசபக்தவெறியை உமிழும் கருவியாகத்தான் செயல்படுகிறது.
வாஷிங்டனில் அவருக்குப் பிடித்த ஹோட்டலில் சௌதி அரேபியத் தூதரைக் கொல்வது பற்றிய படுகொலைத் திட்டத்தில், பெரும்பாலான செய்தி ஊடகத் தகவல்களில் விவரிக்கப்படும் கருத்துக்களில் ஒன்று ஏராளமான மற்றவர்களும் கொல்லப்படும் திறனைக் குண்டுத் தாக்குதல் கொண்டிருக்கும் என்பது பற்றி திட்டம் தீட்டியவர்களின் பொருட்படுத்தாத் தன்மை ஆகும்.நீதித்துறை அதிகாரிகளைத் துல்லியமாக மேற்கோளிடத் தகவல்கள் அதிகம் அக்கறை கொள்ளவில்லை; அந்த அதிகாரிகள் குண்டுத் தாக்குதல் திட்டம் ஒரு “போலியான ஹோட்டலை” இலக்கு கொண்டுள்ளது எனக் கூறினார்;ஏனெனில் அரசாங்க முகவர்கள்தான் இத்திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தயாரித்துள்ளனர், இத்தகைய ஹோட்டல் ஒன்றும் திரு அல்-ஜுபீரால் அடிக்கடி வருகைக்கு உட்படவில்லை. அமெரிக்க வக்கீல் ப்ரீத் பாட்டியா எந்த வெடிப்பொருட்களும் தற்பொழுது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் “யாரும் உண்மையான ஆபத்தில் இல்லை” என்றும் தெளிவாக்கினார்.
படுகொலைச் செய்தி என இருந்தது என்பது பற்றிய அறிவிப்பு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்னும் அமெரிக்க அரசியல்வாதிகளின் பரபரப்பான கோரிக்கைகளைத் தூண்டியுள்ளது. பிரதிநிதிகள் மற்ற உறுப்பினர் Ileana Ros-Lehtinen, மன்ற வெளியுறவுக் குழுவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர், இந்த விவகாரம் “ஈரான் தோற்றுவித்துள்ள அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது” என்பதைத்தான் நிரூபிக்கிறது என்றார். இந்த அச்சுறுத்தல் “ஈரானிய ஆட்சி, அதற்கு ஊக்கம் கொடுப்பார் மீதும் அவர்களை முடக்கிவிடும் அழுத்தத்தின்” மூலம் சந்திக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மன்றத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குழுவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர் பிரதிநிதி பீட்டர் கிங், கூறப்படும் திட்டம் “ஒரு போர்ச்செயல்”என்று விவரித்து, ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவில் எவரேனும் ஈரானிய அதிகாரிகள் இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
செனட் உளவுத்துறைக் குழுவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் டயேன் பீர்ஸ்டின் இத்திட்டம் ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொண்டிருக்கும் என்று உறுதியாகக் கூறினார். “வேறு எந்த வகையிலும் இத்தகைய திட்டம் தீட்டப்பட்டிருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்” என்றார் அவர்.
தன்னுடைய பங்கிற்கு ஜனாதிபதி ஒபாமா இத்திட்டம் “அமெரிக்கா மற்றும் சர்வதேச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவது ஆகும்” என்றார். துணை ஜனாதிபதி பிடென் இது “சீற்றம் தரும் செயல், ஈரானியர்களை இதற்குப் பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும்” என்றார்.
அமெரிக்க உளவுத்துறைதான் இட்டுக் கட்டித் தயாரித்திருக்கக் கூடிய ஒரு படுகொலைத்திட்டம் என்ற போலிக்கருத்து பற்றி அறநெறி வகையில் சீற்றத்தை வெளிப்படுத்திருக்கையில், இவர்கள் அனைவரும் அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனர். அமெரிக்க அரசாங்கம் வாடிக்கையாக உலகம் முழுவதும் உண்மையான படுகொலைகளை நடத்துகிறது; தேசியப் பாதுகாப்புக் குழுவில் ஒரு இரகசியக் குழுவைக்கூட நியமித்து அமெரிக்கக் குடிமக்கள் உட்பட பலரும் இலக்கு கொள்ளப்படும் தாக்குதல் பட்டியலைத் தயாரிக்க முற்பட்டுள்ளது. ஈரானே அதன் முக்கிய விஞ்ஞானிகள் நாட்டின் அணுசக்தித்திட்டத்தைச் சேதப்படுத்துவதற்காக அமெரிக்க-இஸ்ரேலின் செயல் எனக் கருதப்படுவதில் கொலையுண்டிருப்பதைக் கண்டுள்ளது.
இத்தகைய “வேண்டுமென்று நடத்தப்படும் செயல்கள்” மே மாதமே துவங்கிவிட்டன; இது பற்றி ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஜூன் மாதம் தெரிவிக்கப்பட்டது; அந்த நிலையில் பிரச்சினை ஏன் வெள்ளை மாளிகை இப்பொழுது அமெரிக்க மக்களிடம் இந்த சதித் திட்டம் பற்றிய தகவலைக் கூறத் தேர்ந்தெடுத்துள்ளது என்னும் வினாதான் எழுகிறது.
ஈரானிய அரசாங்கமே ஒரு உள்ளார்ந்த விளக்கத்தை அளித்துள்ளது. “அமெரிக்க அரசாங்கமும் CIA வும் இத்தகைய திரைப்படக் கதை போன்றவற்றைத் தயாரிப்பதில் நல்ல அனுபவம் கொண்டவை” என்று ஈரானிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அல் அக்பர் ஜவன்பெக்கிர் டெஹ்ரானில் கூறினார். நாடு முழுவதும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான எதிர்ப்புக்கள் பரவி வருவதைக் குறிப்பிட்ட அவர், “இப்புதியப் பிரச்சாரம் அமெரிக்க மக்களுடைய கருத்துக்களை உள்நாட்டு நெருக்கடிகளிலிருந்து திசைதிருப்புவதற்கு எனத் தோன்றுகிறது” என்றார்.
அமெரிக்க ஆளும் உயரடுக்கும் அதன் அரசியல் ஸ்தாபனமும் பெருகிய முறையில் அமெரிக்காவிலுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி பற்றி கவலை கொண்டுள்ளன, அதேபோல் தொழிலாள வர்க்கம்,இளைஞர்களுடைய பெருகிய சீற்றம் பற்றிக் கவலை கொண்டுள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. இவைதான் வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பாட்டைக் காண்கின்றன. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தூண்டுதல், மீண்டும் ஒரு போருக்குத் தயாரிப்பு நடத்துதல் என்பது உறுதியான அரசியல் நோக்கம் ஒன்றிற்கு உதவும்; அதாவது வெகுஜன வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை என்ற நிலைகள் நாடுமுழுவதும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் திசைதிருப்புதல் என்பதே அது.
செய்தி ஊடகத்தால் திறனாயாத வகையில் ஏற்கப்பட்டுள்ள நிலையில்,ஈரானுக்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் உலகம் முழுவதுமுள்ள ஈரான் பற்றிய வல்லுனர்களால் பெரும் அவநம்பிக்கையுடன்தான் முகங்கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய சதித்திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஈரானிய அரசாங்கம் ஏன் காரணம் கொள்ள வேண்டும் என்று பலரும் வினாவை எழுப்பியுள்ளனர்.
“அமெரிக்காவில் சௌதித் தூதரைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈரான் ஈடுபடும் என்று நான் நம்பத்தயாராக இல்லை. இதில் அரசியல் பயன்பாடு இல்லை” என்று கெய்ரோவின் அல் அஹ்ரம் அரசியல்,மூலோபாயக் கூடத்தின் மூலோபாய வல்லுனர் ஒருவர் மஹமத் கட்ரி சயீத் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அரபு உலகில் எழுச்சிக்கள் உள்ள சூழலில், குறிப்பாக ஈரானின் முக்கிய போட்டி நாடான சௌதி அரேபியாவில், சௌதித் துருப்புக்களால் அடக்கப்பட்ட பஹ்ரைன் எழுச்சிகள் மற்றும் சௌதி முடியாட்சியை தனிமைப்படுத்திக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய சௌதி அரேபியாவிலேயே கிழக்கு மாநில அமைதியின்மை இருக்கையில்,இத்தகைய சதித்திட்டம் பற்றிய பேச்சு சௌதி ஆட்சியை வலுப்படுத்தவும் அமெரிக்க ஆதரவு இருமடங்காக அதற்கு அதிகரிக்கப்படுவதை ஊக்குவிக்கவும்தான் பயன்படும். வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்கள் “ஈரான் பற்றிய சிறப்பு வல்லுனர்களிடையே புதிரை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் அமெரிக்க மண்ணில் ஈரானிய அரசாங்கம் ஒரு திமிர்த்தன கொலை மற்றும் குண்டுத் தாக்குதல் திட்டத்திற்கு ஆதரவு தராது என்றுதான் கூறியுள்ளனர்”என ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு நியூ யோர்க் டைம்ஸ் தள்ளப்பட்டது.
அமெரிக்காவின் கூற்றை வினாவிற்கு உட்படுத்துபவர்களுள் 21 ஆண்டுகள்CIA யின் மத்திய கிழக்கு விவகாரங்களில் அதிகாரியாக உள்ள ரொபேர்ட் பேர் உள்ளார். ABC News இடம் அவர் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில்“நம்பகத்தன்மை” இல்லை என்றார். கூறப்படும் சதித்திட்டம் “ஈரானியரின் வாடிக்கையான செயற்பாடு போல் இல்லை” என்றார் அவர். “இது முற்றிலும் அவர்களுடைய செயல் தன்மையை ஒத்து இருக்கவில்லை. அவர்கள் இதைவிடத் திறமையாகத்தான் செய்வர். ஒரு அமெரிக்க வங்கி மூலம் பணம் அனுப்ப மாட்டார்கள். மெக்சிகோவிலுள்ள போதைக்குழுவிடம் அணுகமாட்டார்கள். அவர்கள் இவ்வகையில் செயல்படுவதில்லை” என்று தொடர்ந்து கூறினார்.
அமெரிக்க நிர்வாகம் இருப்பதாகக் கூறப்படும் சதிக்கு “பதிலடி கொடுக்கும் வகையில், டெஹ்ரானில் Quds Force தளத்தைத் தாக்கலாம், அல்லது வேறு பலவற்றைச் செய்யலாம், ஆனால் இவை அனைத்தும் நிலைமையை பெரிதுபடுத்திவிடும்” என்று Baer எச்சரித்தார்.
முன்னாள் CIA முகவர் இத்திட்டம் டெஹ்ரான் அரசாங்கத்தின் மீது “குற்றம் சாட்டப்பட வேண்டும்” என்ற கருத்துடைய யாருடையதோ செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றார்.
ஈரானுடைய உயரடுக்கு இரகசியப் பிரிவு எதற்காக ஒரு திவாலான முன்னாள் பழைய கார் விற்பனையாளரை, அதுவும் குற்றப் பின்னணி கொண்டவரை, அமெரிக்க மண்ணில் முதல் முறையாக நடத்தும் தன் திட்டத்தைச் செயல்படுத்த தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த நபர் எதற்காக மெக்சிக்கோவிற்கு Loz Zetas ஐ ஏற்பாடு செய்யப் புறப்பட வேண்டும்?பிந்தையதோ போதைப் பொருளில் ஈடுபாடு கொண்டது; போட்டி போதைப் பொருள் விற்பனையாளர்களை கொல்லுமே ஒழிய, வாஷிங்டனில் உள்ள தூதரைக் கொல்லுவது அதன் வேலை இல்லை. அமெரிக்க நீதித்துறை இந்த வினாக்களுக்கு விடையளிக்கவில்லை.
ஓரளவு ஏற்கத்தக்க விளக்கம் அர்பபசியர் மெக்சிகோவிற்குச் சென்றது Qudsபடைகளுக்காக படுகொலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அல்ல,மாறாக போதைப் பொருள் திட்டத்திற்காக இருக்கலாம். DEA வினால் பிடிபட்ட நிலையில், அவர் ஈரானுக்கு எதிராக ஒரு போலி பயங்கரவாத விவகாரத்தைத் தயாரிப்பதற்கு உதவும் கருவியாக “மாறியிருக்கலாம்.”
அவ்வாறு இருக்குமானால், எந்த தீவிர அளவிற்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் வாஷிங்டனின் அதனுடைய புவிசார் அரசியல் மூலோபாய நலன்களைச் செயல்படுத்த இடைவிடாத் தூண்டுதலுக்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்பதற்கு மற்றும் ஒரு அடையாளம் ஆகும். ஆழ்ந்து வரும் பொருளாதார நெருக்கடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள எண்ணெய் உற்பத்திப் பிராந்தியங்களில் மேலாதிக்கத்தை நிறுவ உறுதிகொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதற்காக அது கடந்த தசாப்தத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் போர்களை நடத்தியுள்ளது; தன் கொள்ளை நோக்கங்களுக்கு தடையாக இருப்பது அப்பிராந்திய சக்தியான ஈரான் என்று அது காண்கிறது என்பதை இது தெரிவிக்கிறது.