திங்கள், 31 அக்டோபர், 2011

பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்


பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது.
பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன.
ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர்.
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர்.
அமெரிக்க விருப்பத்தை மீறி பாலஸ்தீனத்தை யுனெஸ்கோ சேர்த்துக்கொண்டுள்ளதால், யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியில் ஏழு கோடி டாலர்களை அது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கச் சட்டம் ஒன்று சொல்கிறது.
இத்தொகை யுனெஸ்கோவுடைய மொத்த நிதியில் பாதிக்கும் அதிகம் ஆகும்.

இஸ்ரேல் எதிர்ப்பு

யுனெஸ்கோவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்புகளை பாதிக்கும் என்று இஸ்ரேல் கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த வாக்கெடுப்பானது, சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையை முன்னுக்கு கொண்டுசெல்ல எடுக்கும் முயற்சிகளை நிராகரிப்பதற்கு ஒப்பானது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

கவிஞர் பொத்துவில் அஸ்மின் தேசிய விருது பெற்றார்

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.
இயக்குனர் கேசவராஜ் இயக்கும் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்.
ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.
இயக்குனர் கேசவராஜ் இயக்கும் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்.
ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கிழக்குத் துருக்கியை உலுக்கிய பாரிய பூகம்பம்


வான் நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து பலர் காயமுற்றதுடன் நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஜீ. எம். டி. நேரம் 10:41 அளவில் ஏற்பட்ட இப்பூமி அதிர்ச்சி 7.2 ரிச்டர் அளவுடையது என் ஆரம்ப ஆய்வுகள் கூறுகின்றன. வான் நகரின் வடக்கே அமைந்துள்ள தபனில் கிராமம் இதன் மையப் புள்ளியாக அமைந்திருந்தது.
துருக்கியின் கந்தில்லி ஆய்வகத்தின் மதிப்பீட்டின்படி 500 முதல் 1000 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு பாதிப்பு ஈரான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஏர்சிஸ் நகர்ப்புறத்துக்கே ஏற்பட்டுள்ளதுடன் வான் நகரமும் கணிசமான பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளது.
பிரதிப் பிரதமர் பசீர் அதலே கருத்துத் தெரிவிக்கையில் வான் நகரில் 10 கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் ஏர்சிஸ் பகுதியில் 25 அல்லது 30 கட்டடங்கள் சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Anatolia செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி வான் நகரில் ஐம்பது பேராவது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
NTV ஒளிபரப்பு நிறுவனத்துடன் பேசிய எர்சிஸ் நகர மேயர் சுல்பிகார் “அதிக கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன, அதிகமானோர் பலியாகியுள்ளனர், சரியான எண்ணிக்கை தெரியவில்லை, நாங்கள் அவசர உதவிக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
முழு சேதத்தை மதிப்பிடுவதில் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். NTVயுடன் பேசிய வான் நகர மேயர் பெகிர் கயா “மக்கள் பதற்றமடைந்துள்ளனர், தொலைத்தொடர்பு சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன, யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றார்.
இராணுவம் தேடுதல் மற்றும் மீட்புப் படையணிகளை அனுப்புவதற்காகத் தயாராகி வருகிறது. புவியதீர்வைத் தொடர்ந்த சிறிய அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
வட மேற்கு ஈரானின் துருக்கியுடனான எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்ட இப்பூமி அதிர்ச்சி பிரதான நகரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புவித்தட்டுகளின் எல்லைக் கோடுகள் துருக்கியின் ஊடாகச் செல்வதால், சிறிய பூமி அதிர்வுகள் நாளாந்த நிகழ்வுகளாக இருப்பினும் 1999இல் இடம்பெற்ற இரண்டு பாரிய பூமி அதிர்ச்சிகள் வடமேற்குத் துருக்கியில் 20,000 க்கும் அதிகமானோரை பலிகொண்டிருந்தன. கடந்த மே மாதம் இதே பகுதியில் சிமாவில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியில் இருவர் பலியானதும் 79 பேர் காயமுற்றதும் குறிப்பிடத்தக்கது.

சனி, 22 அக்டோபர், 2011

சவுதி முடிக்குரிய இளவரசர் சுல்தான் காலமானார்

சவுதி முடிக்குரிய இளவரசரும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருமான சுல்தான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
உடல் நலம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த அ‌ப்து‌ல் அ‌சி‌ஸ் அ‌ல் சவு‌த் மரு‌த்துவமனை‌யி‌ல் அனு‌ம‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சிகிச்சை பலனின்றி அ‌ப்து‌ல் அ‌சி‌ஸ் இ‌ன்று காலமானார். அவரது மறைவு‌க்கு ப‌ல்வேறு நா‌ட்டு தலைவ‌ர்க‌ள் இர‌ங்க‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
சுல்தான் அவர்கள் 1962 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றதில் இருந்து சவுதியில் முடிவெடுக்கும் ஒரு மைய புள்ளியாக செயற்பட்டார்.
மன்னர் அப்துல்லா இப்போது புதிய முடிக்குரிய இளவரசரை நியமிக்க “Allegiance Council” என அழைக்கப்படும் “விசுவாசம் கவுன்சில்”ஐ அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது துணைப் பிரதமரும் உள்துறை மந்திரியுமான இளவரசர் நைப் (Naif) அவர்களின் பெயர் இதற்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசுவாசக் கவுன்சிலானது 2006 இல் அப்துல்லா அவர்கள் மன்னரானபோது ஆரம்பிக்கப்பட்டது. இதன் முக்கிய செயற்பாடாக மன்னருடைய தெரிவை அல்லது பரிந்துரை செய்யப்படும் ஒருவரை முடிக்குரிய இளவரசராக அங்கீகரிப்பதாகும்.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

உங்களிடம் செல்போன் (Mobile Phone) இருந்தால் அவசியம் இதை படியுங்கள்


உங்களிடம் செல்போன் (Mobile Phone) இருந்தால் அவசியம் இதை படியுங்கள்

-முஹம்மத் ஆஷிக்-
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற – உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட – அதிவேக வளர்ச்சியுற்ற – அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் ‘கைபேசி’ உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.
ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field)  அருகிலிருக்கும் மொபைல் (Base Station – 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station  – 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை ‘ஓகே’ செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.
The impact of cell phone radiation on humans..! & How to overcome it carefully..!
பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல்ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவு அலைக்கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!
ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இது 1.6 W/KG (watts per kilogram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது  எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது.
நம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம்.
  1. உங்கள்  செல்ஃபோனின் கையேடு ( user’s manual) மூலம்.
  2. செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
  3. செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து  இந்த தளம் மூலமாக.
நீண்ட நேரம் செல்ஃபோனை ‘ அணைத்த கையும் காதுமாய் ‘ கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு ‘மொபைல் பேச்சாளரின்’ முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது.
நீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு… மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.
தொடர்ந்து இதேபோல ‘அணைத்த கையும் காதுமாய் ‘ செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம்.
ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல்கொண்டு போய் விடுகிறதாம்..!இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, ‘அந்த அளவுக்கெல்லாம்… அப்படியெல்லாம்… ஒன்றும் ஆகாது’ என்று இன்னொரு சாரார்… (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக…?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து “ஆமாமாம்… அந்த சாரார் சொன்னதே சரி”-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா ..!
‘மொபைல்  அடிமைகள்’ ஆகிவிட்ட நம்மால், இதை எல்லாம் கண்டு பயந்து மிகவும் அரிய அவசிய கண்டுபிடிப்பான… இந்த செல்ஃபோனை “இனி வேண்டாம்” என தூக்கி எறிந்து விட முடியுமா..? முடியவே முடியாது அல்லவா..?
எனில், இறைநாடினால், மாற்று வழிகளை கைக்கொண்டு மேற்படி பயங்கர விபரீதத்திலிருந்து தப்பிப்போம்..! அதுவே புத்திசாலித்தனம்..!
இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது ‘ear phone’ என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்… அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது…? அதை காணவில்லையா…? சரி…வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..!   ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?
 அதுவரை என்ன செய்யலாம்…? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னாவிலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே  செல்லாதவாறு பிடித்து பேசுங்கள்.  அப்புறம் ‘Speaker Phone’ என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் ‘Speaker Phone’ உபயோகித்தும் பேசலாமே..! 
‘டவர் சிக்னல் வீக்’ என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே… சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.
‘பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்’ என்றால், இருக்கவே இருக்கே லேண்ட்லைன்..! அதை உபயோகியுங்கள்..! எந்த பயமும் இல்லை… முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே…!
இனி… மொபைல்  சோதனைகளை எல்லாம் கடந்து அதன் மூல

சர்வாதிகார கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்

 லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான்.
இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள். லிபியா இன்னொரு ஈராக்காக , ஆப்கானிஸ்தானாக , ஏன் இன்னொரு பாகிஸ்தானாக மாறினாலும் மக்கள் விரும்பும் இஸ்லாமிய புரட்சி தூரமான கனவாகிவிடும். துனூசிய எழுச்சி, எகிப்திய எழுச்சி இரண்டிலிருந்தும் இது வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும்  காட்சிகள்
உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபியின் மகன் முஹ்தசிம் கொல்லப்பட முன்னர்
கடாபியின் மக்களில் அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டு வந்த சைபுல் இஸ்லாம் என்ற மகன் தப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவரை மேற்கு ஏகாதிபத்தியம் பாதுகாத்து தேவையான போது தமக்கு சாதகாமாக பயன்படுத்தப்போகின்றதோ  ? தெரியவில்லை.

வியாழன், 20 அக்டோபர், 2011

முஅம்மர் கடாபி கொல்லப்பட்டார்


சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லிபிய முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக லிபிய புரட்சிப் படைகளின் தளபதி அப்துல் ஹக்கீம் பெல்ஹஜ் உருதிப்படுத்தியதாக அல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கடாபி அவர்கள் சிர்டே நகரில் ஏற்பட்ட சண்டையில் புரட்சிப் படையிடம் சிக்கி பின்னர் காயம் காரணமாக இறந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இறந்த முவாம்மர் கடாபியின் உடல் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரகசியமான ஒரு இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக புரட்சிப் படையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடாபியின் உடல் தங்களிடம் தற்பொழுது இருப்பதாகவும் அதை காரிலே இரகசியமான ஒரு இடத்திற்கு எடுத்துச்செல்வதாக புரட்சிப் படையின் அதிகாரி முகம்மத் அப்தல் கபி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
முன்னதாக புரட்சிப் படை அதிகாரி ஜமால் அபூ ஸாலெஹ் முக்கிய தலைவர் பிடிபட்டதாக அல்ஜசீராவிடம் தெரிவித்தார். அதேநேரம் “அவர் பிடிபட்டுவிட்டார். அவரது இருகால்களிலும் காயம்பட்டிருக்கிறது,” என்று இடைக்கால அரச அதிகாரி அப்டல் மஜித் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். வண்டியில் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முவாம்மர் கடாபி இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார், ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
சிர்டே நகரை கைப்பற்றியபோது முவாம்மர் கடாபியின் முன்னால் பேச்சாளர் மூஸா இப்ராகிமும் கைது செய்யப்பட்டதாக புரட்சிப் படைஅதிகாரி தெரிவித்தார்.
அல்ஜசீராவில் பதிவு செய்யப்பட்ட படம்

அல்ஜசீராவில் பதிவு செய்யப்பட்ட படம்

புதன், 19 அக்டோபர், 2011

மனிதனாக வாழ வழிகள்

மனித வாழ்க்கை ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறைகள், மற்றும் அவர்களது சிந்தனைகளை பொறுத்து வித்தியாசப்படும்.இருந்தபோதும், ஒரு மனிதன் எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்று உலகின் பல்வேறு நெறிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வகையில் மனிதனாக வாழ வழிகள் எனும் பின்வரும் அறிவுரைத் தொகுப்பு வாசகர்களுக்காக வழங்கப்படுகின்றது.

திங்கள், 17 அக்டோபர், 2011

பயங்கரவாத சதித்திட்டங்களை தீட்டுகிறது என்ற குற்றச்சாட்டில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிடுகிறது


புதன்கிழமையன்று, வெள்ளை மாளிகை தான் புதிய சுற்றுப் பொருளாதாரத் தடைகளை ஈரானுக்கு எதிராக சுமத்துவதாக அறிவித்தது; துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் வாஷிங்டனில் சௌதி தூதரைப் படுகொலை செய்ய இருந்ததாகக் கூறப்படும் திட்டம் பற்றிக் கேட்கப்படுகையில் “அனைத்து விருப்பங்களும் மேசை மீது உள்ளன” என எச்சரித்தார்; இது இராணுவத் தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்பையும் தெரிவிக்கிறது.
ஈரானின் முதல் தனியார்மய விமான நிறுவனமான Mahan Air அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளில் புதிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. இது 12நாடுகளுக்கு விமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இந்த விமான நிறுவனம் ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புக் குழுவினரின் உறுப்பினர்களை “இரகசியமாகப்” பல இடங்களுக்கு அனுப்பவதில் ஈடுபட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் முயற்சி என்று இத்திட்டம் பற்றி குற்றம் சாட்டப்படுவதை வாஷிங்டன் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு,ஈரானிடம் இருந்து வருவதாகக் கூறப்படும் தெளிவற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக உலகந்தழுவிய பயண எச்சரிக்கையை வெளியிட்டதுடன்,அமெரிக்காவிற்குள் தாக்குதல்கள் நடத்தப்படுவதும் சாத்தியமே என்று எச்சரித்துள்ளது.
வாஷிங்டனில் செவ்வாயன்று இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் எனப்படும் சதித்திட்டம் பற்றி அமெரிக்கத் தலைமை அரசாங்க வக்கீல் எரிக் ஹோல்டர் பகிரங்கமாக அறிவித்தார். நீதித்துறை கொடுக்கும் தகவலோ அதிகம் நம்பிக்கை தராத தளத்தைக் கொண்டுள்ளது; இதில் டெக்சாஸில் இருந்து மெக்சிகோவிற்கு சென்ற பழைய கார்கள் விற்பனையாளரும்,ஈரானிய-அமெரிக்கருமான Manssor Arbasiar என்பவர் சௌதி தூதர் அப்டல் அல்-ஜுபீரை வாஷிங்டனில் பெயரிடப்படாத ஒரு ஹோட்டலில் வைத்துத் தகர்த்துவிடும் படுகொலைத் திட்டத்திற்காக மிகவும் அஞ்சப்படும் போதைபொருள் கடத்தல்குழு Los Zetas ஐ நாடுவதற்கு முயற்சி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் மற்றொரு திரித்தல் லாஸ் ஜேடாஸின் பிரதிநிதி என்று கூறப்படுபவரும் அர்பசியரை தொடர்பு கொண்டவரும் DEAஎனப்படும் அமெரிக்கப் போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்திற்கு இரகசியத் தகவல் கொடுப்பவர் என்பதாகும்.
செவ்வாய் செய்தியாளர் கூட்டத்தில் FBI இயக்குனர் ரோபர்ட் முல்லர் அரசாங்கத்தின் நிகழ்வு பற்றிய செய்தி “ஹாலிவுட் திரைப்படக் கதையிலுள்ள பக்கங்களைப் படிப்பது போல் உள்ளது” என்று ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.
அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் கூறினார்: “கருத்து என்னவென்றால் அவர்கள் ஒரு மெக்சிக்கோ நாட்டு போதைக் கும்பலை நாடி கூலிக்குச் சௌதித் தூதரைக் கொலை செய்ய முற்படுவர் என்பது; இதை யாரும் நம்ப மாட்டார் என நினைக்கலாம் அல்லவா, சரிதானே?”
இப்பிரச்சினைதான் இந்த முழு விவகாரத்திலும் எழுந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் பலமுறையும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்னும் நடவடிக்கைப் போக்கில் “தயாரிக்கும்” சதித்திட்டம் பற்றிய குறிப்புக்களில் காணப்படும் அனைத்துக் கூறுபாடுகளும் இதில் உள்ளன; அமெரிக்க நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் முன் உண்மையில் இராத பயங்கரவாதத் திட்டங்களில் ஏதும் செய்ய இயலாத தனிநபர்களை பொறியில் தள்ளுவதற்கு இரகசிய முகவர்களைப் பயன்படுத்துதல் என்பதே அது.
ஆனால், இந்த விவகாரத்தில், திட்டம் எனக் கூறப்படுவது ஒரு சில தனிநபர்களை ஈடுபடுத்துவது என்று மட்டும் இல்லாமல் 75 மில்லியன் மக்கள் அதன் அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்ட நாடும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது; இது ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைவிட மிகக் கூடுதலான பேரழிவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட போருக்கு அரங்கை அமைக்கும்.
இத்திட்டம் தொடர்பாக பெயரிடப்பட்டுள்ள ஒரே மற்றொரு நபர் கோலம் ஷகுரி என்பவர்; இவர் Quds Brigade எனப்படும் 150,000 பேர் அடங்கிய ஈரானியச் சிறப்புப் படைகளின் புரட்சிப் பாதுகாப்புப் பிரிவில் ஓர் உறுப்பினர் ஆவார்.
தேசிய பாதுகாப்பு இரகசியம் என்னும் பெயரில் இந்த விவகாரத்தை வைப்பதற்கு அரசாங்கம் கொடுக்கும் சான்று மிகவும் பலவீனமான தன்மையைக் கொண்டுள்ளது; அச்சான்றுகளில் எதுவும் ஈரானிய அரசாங்கம் தீட்டியதாகக் கூறப்படும் சதித்திட்டம் பற்றி எந்த நேரடித் தொடர்போ அது பற்றிய தகவல்களோ குறிக்கப்படவில்லை. இந்த விவரங்கள் அனைத்துமே அர்பப்சியர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இருந்து வெளிவந்துள்ளன; அவரோ ஒரு முன்னாள் வணிகக் கூட்டாளியால்“கவரப்படுபவர்….சற்று சோம்பேறியானாலும்”, “பெரிய திட்டம் தீட்டமுடியாதவர்” என்றுதான் இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும்கூட, புதன்கிழமையை ஒட்டி அமெரிக்க அதிகாரிகள், “பெயர் கூறக்கூடாது என்ற நிபந்தனையில்”, ஈரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி சௌதி தூதரைக் கொலை செய்யும் திட்டம் பற்றித்“தெரிந்திருக்கக் கூடும்” என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
இத்தகைய தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்றுதான் எளிதில் அமெரிக்கப் பெருநிறுவனச் செய்தி ஊடகம் கருதுகிறது; ஏற்கனவே இது ஈரானிய அரசாங்கம் மீது குற்றம் சாட்டி, விசாரணை நடத்தி தண்டனை சுமத்தப்படுவதற்குத்தான் காத்திருக்கிறது. நல்ல பயிற்சி பெற்ற CIAசொத்துக்கள், CNN இன் வுல்ப் பிளிட்சர் போன்றவர்கள் இந்த விவகாரத்தைப் பற்றி ஆர்வத்துடன் பேசி அரசாங்கத்தின் குற்றங்களைப் பெரும் களிப்புடன்,ஏதோ நிரூபிக்கப்பட்டுவிட்டது போல், ஆதரவைக் கொடுக்கின்றனர்.
செய்தி ஊடகம் இதை எதிர்கொண்டுள்ள விதம் ஈராக்கிற்கு எதிரான போருக்கு வழிவகுத்ததில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்த “பேரழிவு ஆயுதங்கள்” தொடர்பான நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்களுக்குக் காட்டப்பட்ட விளைவில் இருந்து மாறுபடாத தன்மையைத்தான் இவை இயல்பாகக் கொண்டுள்ளன என்பதைத்தான் நிரூபிக்கிறது. செய்தி ஊடக நடைமுறை மீண்டும் போர்ப் பிரச்சாரத்தின் தேசபக்தவெறியை உமிழும் கருவியாகத்தான் செயல்படுகிறது.
வாஷிங்டனில் அவருக்குப் பிடித்த ஹோட்டலில் சௌதி அரேபியத் தூதரைக் கொல்வது பற்றிய படுகொலைத் திட்டத்தில், பெரும்பாலான செய்தி ஊடகத் தகவல்களில் விவரிக்கப்படும் கருத்துக்களில் ஒன்று ஏராளமான மற்றவர்களும் கொல்லப்படும் திறனைக் குண்டுத் தாக்குதல் கொண்டிருக்கும் என்பது பற்றி திட்டம் தீட்டியவர்களின் பொருட்படுத்தாத் தன்மை ஆகும்.நீதித்துறை அதிகாரிகளைத் துல்லியமாக மேற்கோளிடத் தகவல்கள் அதிகம் அக்கறை கொள்ளவில்லை; அந்த அதிகாரிகள் குண்டுத் தாக்குதல் திட்டம் ஒரு “போலியான ஹோட்டலை” இலக்கு கொண்டுள்ளது எனக் கூறினார்;ஏனெனில் அரசாங்க முகவர்கள்தான் இத்திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தயாரித்துள்ளனர், இத்தகைய ஹோட்டல் ஒன்றும் திரு அல்-ஜுபீரால் அடிக்கடி வருகைக்கு உட்படவில்லை. அமெரிக்க வக்கீல் ப்ரீத் பாட்டியா எந்த வெடிப்பொருட்களும் தற்பொழுது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் “யாரும் உண்மையான ஆபத்தில் இல்லை” என்றும் தெளிவாக்கினார்.
படுகொலைச் செய்தி என இருந்தது என்பது பற்றிய அறிவிப்பு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்னும் அமெரிக்க அரசியல்வாதிகளின் பரபரப்பான கோரிக்கைகளைத் தூண்டியுள்ளது. பிரதிநிதிகள் மற்ற உறுப்பினர் Ileana Ros-Lehtinen, மன்ற வெளியுறவுக் குழுவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர், இந்த விவகாரம் “ஈரான் தோற்றுவித்துள்ள அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது” என்பதைத்தான் நிரூபிக்கிறது என்றார். இந்த அச்சுறுத்தல் “ஈரானிய ஆட்சி, அதற்கு ஊக்கம் கொடுப்பார் மீதும் அவர்களை முடக்கிவிடும் அழுத்தத்தின்” மூலம் சந்திக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மன்றத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குழுவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர் பிரதிநிதி பீட்டர் கிங், கூறப்படும் திட்டம் “ஒரு போர்ச்செயல்”என்று விவரித்து, ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவில் எவரேனும் ஈரானிய அதிகாரிகள் இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
செனட் உளவுத்துறைக் குழுவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் டயேன் பீர்ஸ்டின் இத்திட்டம் ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொண்டிருக்கும் என்று உறுதியாகக் கூறினார். “வேறு எந்த வகையிலும் இத்தகைய திட்டம் தீட்டப்பட்டிருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்” என்றார் அவர்.
தன்னுடைய பங்கிற்கு ஜனாதிபதி ஒபாமா இத்திட்டம் “அமெரிக்கா மற்றும் சர்வதேச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவது ஆகும்” என்றார். துணை ஜனாதிபதி பிடென் இது “சீற்றம் தரும் செயல், ஈரானியர்களை இதற்குப் பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும்” என்றார்.
அமெரிக்க உளவுத்துறைதான் இட்டுக் கட்டித் தயாரித்திருக்கக் கூடிய ஒரு படுகொலைத்திட்டம் என்ற போலிக்கருத்து பற்றி அறநெறி வகையில் சீற்றத்தை வெளிப்படுத்திருக்கையில், இவர்கள் அனைவரும் அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனர். அமெரிக்க அரசாங்கம் வாடிக்கையாக உலகம் முழுவதும் உண்மையான படுகொலைகளை நடத்துகிறது; தேசியப் பாதுகாப்புக் குழுவில் ஒரு இரகசியக் குழுவைக்கூட நியமித்து அமெரிக்கக் குடிமக்கள் உட்பட பலரும் இலக்கு கொள்ளப்படும் தாக்குதல் பட்டியலைத் தயாரிக்க முற்பட்டுள்ளது. ஈரானே அதன் முக்கிய விஞ்ஞானிகள் நாட்டின் அணுசக்தித்திட்டத்தைச் சேதப்படுத்துவதற்காக அமெரிக்க-இஸ்ரேலின் செயல் எனக் கருதப்படுவதில் கொலையுண்டிருப்பதைக் கண்டுள்ளது.
இத்தகைய “வேண்டுமென்று நடத்தப்படும் செயல்கள்” மே மாதமே துவங்கிவிட்டன; இது பற்றி ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஜூன் மாதம் தெரிவிக்கப்பட்டது; அந்த நிலையில் பிரச்சினை ஏன் வெள்ளை மாளிகை இப்பொழுது அமெரிக்க மக்களிடம் இந்த சதித் திட்டம் பற்றிய தகவலைக் கூறத் தேர்ந்தெடுத்துள்ளது என்னும் வினாதான் எழுகிறது.
ஈரானிய அரசாங்கமே ஒரு உள்ளார்ந்த விளக்கத்தை அளித்துள்ளது. “அமெரிக்க அரசாங்கமும் CIA வும் இத்தகைய திரைப்படக் கதை போன்றவற்றைத் தயாரிப்பதில் நல்ல அனுபவம் கொண்டவை” என்று ஈரானிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அல் அக்பர் ஜவன்பெக்கிர் டெஹ்ரானில் கூறினார். நாடு முழுவதும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான எதிர்ப்புக்கள் பரவி வருவதைக் குறிப்பிட்ட அவர், “இப்புதியப் பிரச்சாரம் அமெரிக்க மக்களுடைய கருத்துக்களை உள்நாட்டு நெருக்கடிகளிலிருந்து திசைதிருப்புவதற்கு எனத் தோன்றுகிறது” என்றார்.
அமெரிக்க ஆளும் உயரடுக்கும் அதன் அரசியல் ஸ்தாபனமும் பெருகிய முறையில் அமெரிக்காவிலுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி பற்றி கவலை கொண்டுள்ளன, அதேபோல் தொழிலாள வர்க்கம்,இளைஞர்களுடைய பெருகிய சீற்றம் பற்றிக் கவலை கொண்டுள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. இவைதான் வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பாட்டைக் காண்கின்றன. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தூண்டுதல், மீண்டும் ஒரு போருக்குத் தயாரிப்பு நடத்துதல் என்பது உறுதியான அரசியல் நோக்கம் ஒன்றிற்கு உதவும்; அதாவது வெகுஜன வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை என்ற நிலைகள் நாடுமுழுவதும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் திசைதிருப்புதல் என்பதே அது.
செய்தி ஊடகத்தால் திறனாயாத வகையில் ஏற்கப்பட்டுள்ள நிலையில்,ஈரானுக்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் உலகம் முழுவதுமுள்ள ஈரான் பற்றிய வல்லுனர்களால் பெரும் அவநம்பிக்கையுடன்தான் முகங்கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய சதித்திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஈரானிய அரசாங்கம் ஏன் காரணம் கொள்ள வேண்டும் என்று பலரும் வினாவை எழுப்பியுள்ளனர்.
“அமெரிக்காவில் சௌதித் தூதரைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈரான் ஈடுபடும் என்று நான் நம்பத்தயாராக இல்லை. இதில் அரசியல் பயன்பாடு இல்லை” என்று கெய்ரோவின் அல் அஹ்ரம் அரசியல்,மூலோபாயக் கூடத்தின் மூலோபாய வல்லுனர் ஒருவர் மஹமத் கட்ரி சயீத் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அரபு உலகில் எழுச்சிக்கள் உள்ள சூழலில், குறிப்பாக ஈரானின் முக்கிய போட்டி நாடான சௌதி அரேபியாவில், சௌதித் துருப்புக்களால் அடக்கப்பட்ட பஹ்ரைன் எழுச்சிகள் மற்றும் சௌதி முடியாட்சியை தனிமைப்படுத்திக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய சௌதி அரேபியாவிலேயே கிழக்கு மாநில அமைதியின்மை இருக்கையில்,இத்தகைய சதித்திட்டம் பற்றிய பேச்சு சௌதி ஆட்சியை வலுப்படுத்தவும் அமெரிக்க ஆதரவு இருமடங்காக அதற்கு அதிகரிக்கப்படுவதை ஊக்குவிக்கவும்தான் பயன்படும். வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்கள் “ஈரான் பற்றிய சிறப்பு வல்லுனர்களிடையே புதிரை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் அமெரிக்க மண்ணில் ஈரானிய அரசாங்கம் ஒரு திமிர்த்தன கொலை மற்றும் குண்டுத் தாக்குதல் திட்டத்திற்கு ஆதரவு தராது என்றுதான் கூறியுள்ளனர்”என ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு நியூ யோர்க் டைம்ஸ் தள்ளப்பட்டது.
அமெரிக்காவின் கூற்றை வினாவிற்கு உட்படுத்துபவர்களுள் 21 ஆண்டுகள்CIA யின் மத்திய கிழக்கு விவகாரங்களில் அதிகாரியாக உள்ள ரொபேர்ட் பேர் உள்ளார். ABC News இடம் அவர் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில்“நம்பகத்தன்மை” இல்லை என்றார். கூறப்படும் சதித்திட்டம் “ஈரானியரின் வாடிக்கையான செயற்பாடு போல் இல்லை” என்றார் அவர். “இது முற்றிலும் அவர்களுடைய செயல் தன்மையை ஒத்து இருக்கவில்லை. அவர்கள் இதைவிடத் திறமையாகத்தான் செய்வர். ஒரு அமெரிக்க வங்கி மூலம் பணம் அனுப்ப மாட்டார்கள். மெக்சிகோவிலுள்ள போதைக்குழுவிடம் அணுகமாட்டார்கள். அவர்கள் இவ்வகையில் செயல்படுவதில்லை” என்று தொடர்ந்து கூறினார்.
அமெரிக்க நிர்வாகம் இருப்பதாகக் கூறப்படும் சதிக்கு “பதிலடி கொடுக்கும் வகையில், டெஹ்ரானில் Quds Force தளத்தைத் தாக்கலாம், அல்லது வேறு பலவற்றைச் செய்யலாம், ஆனால் இவை அனைத்தும் நிலைமையை பெரிதுபடுத்திவிடும்” என்று Baer எச்சரித்தார்.
முன்னாள் CIA முகவர் இத்திட்டம் டெஹ்ரான் அரசாங்கத்தின் மீது “குற்றம் சாட்டப்பட வேண்டும்” என்ற கருத்துடைய யாருடையதோ செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றார்.
ஈரானுடைய உயரடுக்கு இரகசியப் பிரிவு எதற்காக ஒரு திவாலான முன்னாள் பழைய கார் விற்பனையாளரை, அதுவும் குற்றப் பின்னணி கொண்டவரை, அமெரிக்க மண்ணில் முதல் முறையாக நடத்தும் தன் திட்டத்தைச் செயல்படுத்த தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த நபர் எதற்காக மெக்சிக்கோவிற்கு Loz Zetas ஐ ஏற்பாடு செய்யப் புறப்பட வேண்டும்?பிந்தையதோ போதைப் பொருளில் ஈடுபாடு கொண்டது; போட்டி போதைப் பொருள் விற்பனையாளர்களை கொல்லுமே ஒழிய, வாஷிங்டனில் உள்ள தூதரைக் கொல்லுவது அதன் வேலை இல்லை. அமெரிக்க நீதித்துறை இந்த வினாக்களுக்கு விடையளிக்கவில்லை.
ஓரளவு ஏற்கத்தக்க விளக்கம் அர்பபசியர் மெக்சிகோவிற்குச் சென்றது Qudsபடைகளுக்காக படுகொலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அல்ல,மாறாக போதைப் பொருள் திட்டத்திற்காக இருக்கலாம். DEA வினால் பிடிபட்ட நிலையில், அவர் ஈரானுக்கு எதிராக ஒரு போலி பயங்கரவாத விவகாரத்தைத் தயாரிப்பதற்கு உதவும் கருவியாக “மாறியிருக்கலாம்.”
அவ்வாறு இருக்குமானால், எந்த தீவிர அளவிற்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் வாஷிங்டனின் அதனுடைய புவிசார் அரசியல் மூலோபாய நலன்களைச் செயல்படுத்த இடைவிடாத் தூண்டுதலுக்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்பதற்கு மற்றும் ஒரு அடையாளம் ஆகும். ஆழ்ந்து வரும் பொருளாதார நெருக்கடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள எண்ணெய் உற்பத்திப் பிராந்தியங்களில் மேலாதிக்கத்தை நிறுவ உறுதிகொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதற்காக அது கடந்த தசாப்தத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் போர்களை நடத்தியுள்ளது; தன் கொள்ளை நோக்கங்களுக்கு தடையாக இருப்பது அப்பிராந்திய சக்தியான ஈரான் என்று அது காண்கிறது என்பதை இது தெரிவிக்கிறது.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்குத் தரமாட்டார்கள்:ஜனாதிபதி

கொழும்பு தேர்தல் முடிவு பற்றி நீங்கள என்ன கூறுகிறீர்கள் என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த ஜனாதிபதி நீங்கள் எதனை கூறுகிறீர்களோ அதனையே நானும் கூறுகிறேன். கொழும்பின் முடிவு இப்படி அமையும் என்பது எனக்கு முன்பே தெரியும். முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்கு தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட முஸ்லிம் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கொழும்பு தவிர்ந்த பகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமாக ஆளும் கட்சிக்கு வாக்களை வழங்கியுள்ளார்கள். காலி நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் ஆளும் கட்சில் முஸ்லிம் வேட்பாளர்கள் பட்டியலின் ஆரம்பதிற்கே தெரிவாகியுள்ளார்கள் என்று தெரிவித்தபோது. அங்கெல்லாம் நிலைமை வேறு என்று குறிபிட்ட ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் ஆறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினோம் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை . பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 28 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அம்பாந்தோட்டையில் மாநகர சபைக்கான தேர்தலில் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவாகியுள்ளனர். என்பது குறிபிடத்தக்கது.
நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மொத்தமாக 420 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் 70 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து 16 உறுபினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து ) 28 முஸ்லிம் உறுபினர்களும் , ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 25 முஸ்லிம் உறுபினர்களும் , ஐக்கிய ஜனநாயக முன்னணியி 01 முஸ்லிம் உறுபினருமாக 70 பேரே தெரிவாகியுள்ளனர்.
இதில் கூடிய முஸ்லிம் உறுப்பினர்களை பெற்றுகொண்டுள்ள கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே உள்ளது என்பது குறிபிடதக்கது .

வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஜித்தா வீதி விபத்தில் இலங்கை தம்பதிகள் பலி

 சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையிலிருந்து யாத்திரீகர்களாகச் சென்ற கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளதாக ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மக்கா - ஜெத்தா வீதியில் புதன்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தின்போது, அப்துல் வாஹிட் அப்துல் ஜவாட் (வயது-47), அவரது மனைவி அப்துல் ஹலீம் ஷம்சுன்நிஸா (வயது 42) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து யாத்திரீகர்களாக சென்றவர்களே உயிரிழந்துள்ளனர். அதே வான் வண்டியில் சென்ற மற்றுமொரு இலங்கையர் இருவர் காயமடைந்துள்ளதாகவும் மேற்படி உயர்ஜ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
___ E-mail to a friend

வியாழன், 13 அக்டோபர், 2011

‘பசிக்கொடுமைக்கு செல்வந்த நாடுகளே காரணம்’

உலகின் வறிய பகுதிகளில் பசிக்கொடுமைக்கு மனிதர்களின் நடவடிக்கைகளே காரணமாகத் தொடர்வதாக உணவுக் கொள்கை குறித்த முன்னணி அறிவு ஜீவிகளின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
விவசாயக் காணிகளை தாவர எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்துவது அதிகரிப்பது, உணவு உற்பத்தி குறித்த நிதித்துறை எதிர்வு கூறல்கள், மற்றும் அதீத காலநிலை மாற்றம் தரும் அதிர்ச்சி ஆகியன, வறிய மக்களை பட்டினி உலகில் தொடர்ந்தும் வைத்திருப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச உணவு கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் என்னும் அமைப்பு கூறியுள்ளது.
வறிய நாடுகளில், அதிலும் பெரும்பாலும் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே இருக்கும் நாடுகளில் பட்டினி நிலைமை மோசமடைவதற்கு செல்வந்த நாடுகளின் செயற்பாடுகளே காரணம என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
இதில் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற செல்வந்த நாடுகள் தாவர எரிபொருட்களுக்கான அதிகாரபூர்வ இலக்கை அதிகரிப்பதும் உள்ளடங்குகிறது.
இதனால், ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உணவுப் பயிர் செய்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளில் தாவர எரிபொருளுக்கான பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
சர்வதேச சந்தையில் எதிர்கால உணவு விலையை முன்கூட்டியே எதிர்வு கூறி நடத்தப்படுகின்ற உணவு ஊகவணிகமும், உணவுப் பொருட்களின் விலையேற்றத்துக்கு காரணமாகியுள்ளன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
அதேவேளை காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற சில நாடுகளில் காணப்படும் கொடிய பஞ்சத்துக்கு உள்நாட்டுப் போர்களும் காரணம் என்பதையும் அது சுட்டிக்காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக உலக மட்டத்தில் 1990 ஆண்டு முதல் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு தென்கிழக்காசியாவிலும், தெற்கு அமெரிக்காவிலும் ஏற்பட்ட விளைச்சல் அதிகரிப்பே காரணம் என்றும் உலக பசிச் சுட்டெண் என்ற பெயரிலான இந்த ஆண்டறிக்கை கூறுகிறது.
ஆனால், தற்போது சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகமான அளவு பசிக்கொடுமை தாக்கப் போகிறது என்றும், ஆனால் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் அந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை கானா மாத்திரம் விதி விலக்காக இருப்பதாகவும், பட்டினியை குறைப்பதில் அந்த நாடு வெற்றி கண்டிருப்பதாகவும் அது கூறுகிறது. கானாவில் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு தினமும் சூடான உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை வழங்கும் கொள்கை சிறார்களும், விவசாயிகளும் சிறப்பாகச் செயற்பட உதவியதாக கானாவின் அதிபர் ஜோண் கொஃப்பூர் கூறியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது:

புதன், 12 அக்டோபர், 2011

ஹஜ் பயணிகளுக்காக இரத்ததானம் செய்ய விரும்புபவர்களுக்கு

உலகெங்கிலும் இருந்து ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வரும் பயணிகளில் தேவைப்படுபவர்களுக்கு இரத்ததானம் செய்து உயிர்காப்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மாநகரில் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
இங்கு வழங்கப்படும் இரத்தம் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு எடுத்து செல்லப்படும். எனவே ரியாதில் வசிக்கும் இரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
நாள் : 21-10-11, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி, ரியாத்
மேலும் விபரங்களுக்கு – 0536885911, 0542540860, 0509181890

இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை

மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராகிறான். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதல்ல. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. வரம்புகளுக்குட்பட்டது. எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர். வரம்பு மீறாதீர் என இறைவன் எச்சரித்துள்ளான்.
அவற்றை உணர்ந்துக் கொண்டே மனித இனம் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான் இறைவன்.
சமீப காலங்களில் அடிக்கடி நிலநடுக்கங்கள், பூகம்பங்கள்,சுனாமி பேரலைகள், புயல் சீற்றங்கள், கடல் கொந்தளிப்புகள் என இயற்கை பேரழிவுகள் குறித்த செய்திகளை கண்டும், கேட்டும் பல நாடுகளிலும் மனித இனம் கலங்கிபோயிருப்பதை காண்கின்றோம்.
மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆற்றல் அபரிவிதமானது. ஆனால் மனிதனோ தன்னை படைத்த அல்லாஹ்வையே மறந்து அவன் விதித்த மனித வாழ்வின் நெறிமுறைகளை விதிமுறைகளை மீறி நடக்கும் போது தன்னை தன் ஆற்றலை தன் சிந்தனையை மனிதனுக்கு உணர்த்திட இயற்கை பேரழிவுகளை எச்சரிக்கையாகவும் படிப்பினைப் பெற்று பக்குவம் பெறுவதற்காகவும் ஏற்படுத்துகிறான். ஆயினும் மனித சமுதாயம் படிப்பினை பெற மறுக்கிறது. அல்லாஹ் திருமறையில் குர்ஆனில் கூறுகிறான்.
واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان يأتيكم العذاب بغتة وانتم لا تشعرون 39:55
நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள்.
மனிதன் எதை பற்றியும் சிந்திக்காமல் பிறர் நலன் மீறி, சுய நலமொன்றே தமது குறிக்கோளாகவும் அல்லாஹ்வையும் மறுமையையும் மறந்து சுகபோகம் ஒன்றே தன் வாழ்வின் இலட்சியமாகவும் கருதி வாழ முற்பட்டதின் விளைவு தானே ஓசோன் படலத்தில் ஓட்டை எனும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு.இந்த உலகில் எத்தனையோ சமுதாயத்தவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்தந்த சமுதாயத்தவர் அல்லாஹ்வை மறுத்து அவன் விதித்த வரம்புகளை மீறி நடந்த போது அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இயற்கை பேரழிவுகளை ஓர் இறை எச்சரிக்கையாகவே திருமறையில் விவரிக்கிறான்.
நூஹ் (அலை) அவர்களுடைய கவ்முகள், இறைவனை, இறைக் கட்டளைகளை ஏற்க மறுத்து வாழ்வில் அநியாய அக்கிரமங்கள் செய்த போது தன் நபியையும் வழிபட்டவர்களையும் பாதுகாத்து வரம்பு மீறியோரை வெள்ளப் பிரளயத்தால் அழித்தொழித்ததை எடுத்தியம்பி மனித இனத்தவருக்கு எச்சரிக்கை விடுக்கிறான்.
ஆது சமுதாயத்தவருக்கு ஹூது (அலை) நபியாக அனுப்பப்பட்டார்கள். எமனில் ஹழர மௌத் பிரதேசத்தில் முஹ்றா எனும் கிராமத்தில் அஹ்காஃப் என்னும் ஓர் ஓடைப் பகுதி. அதில் பெரும்பாலும் மணல்மேடு. அந்த பகுதியில் தான் ஆதுக் கூட்டத்தார்கள் வசித்தார்கள். அவர்கள் பலசாலிகளாகவும் இருந்தார்கள். சுய பலத்தில் மதிமயங்கி அநியாய அக்கிரம அனாச்சாரங்கள் செய்து வந்தார்கள். அவர்கள் பெரும் செல்வம் படைத்தவர்களாயும் இருந்தார்கள். எனவே செருக்கு அதிகமாகி இறையோனை நிராகரித்து வரம்புகள் மீறி அக்கிரமங்களில் ஈடுபட்டார்கள். ஹூது (அலை) அவர்களை ஏளனப்படுத்தி எப்போது வரும் நீர் கூறும் இறைவேதனை என வினவினார்கள்.
வேதனையும் வந்தது என்ன நிகழ்ந்தது என்பதை ஓர் இறை எச்சரிக்கையாகவே குர்ஆன் கூறுகிறது.
فلما رأوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم تدمر كل شيئ بامر ربها فاصبحوا لا يرى الا مسكنهم كذلك نجزى القوم المجرمين 46:24.25
ஆகவே (தண்டனையாகிய) அதனை தங்களது பள்ளத்தாக்குகளை முன்னோக்கிவரும் மேகக் (கூட்டமாக) கண்ட போது இது நமக்கு மழையை பொழிய வைக்கும் மேகமாகும், என்று அவர்கள் கூறிக் கொண்டனர். அல்ல. எதனை நீங்கள் விரைவாக தேடினீர்களோ அந்த ஒன்றாகும். (அது) ஒரு புயற்காற்று,அதில் நோவினை தரும் வேதனை இருக்கிறது (என்று கூறப்பட்டது).
அப்புயலானது தனது ரப்பின் கட்டளைப்படி எல்லா பொருட்களையும் அழித்து நாசமாக்கிவிடும் (என்றும் கூறப்பட்டது) பின்னர் அவர்களுடைய இல்லங்களைத் தவிர (வேரொன்றும்) காணப்படாதவாறு காலையில் அவர்கள் (அழிவிற்குள்) ஆகிவிட்டனர். இவ்வாறே குற்றவாளிகளான கூட்டத்தாருக்கு நாம் கூலி கொடுப்போம். 46:24,25.
காற்று எனும் இயற்கை வளம் மனிதன் உயிர் வாழ இன்றியமையாத ஓர் இறை அருட்கொடையாகும். ஆயினும் மனிதன் இறை வரம்பு மீறும் போது இறை சோதனையாக மாறி இயற்கை சீற்றமாக புயல் காற்றாக உருவெடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகளும், பேரிழப்புகளும் கொடூரமான இறை வேதனையாக மாறிவிடுகிறது.
عن ابي هريرة رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الريح من روح الله تأتي بالرحمة وتأتي بالعذاب فاذا رأيتموها فلا تسبوها واسألواالله خيرها واستعيذوا بالله من شرها (رواه ابو داود باسناد حسن)
ஆபூஹூறைறா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூலுல்லாஹி r வர்கள் சொல்ல நான் செவிமடுத்தேன். காற்று அல்லாஹ்வின் கிருபையாகும். அது அல்லாஹ்வின் அருட்கொடையை கொண்டு வருகிறது. சிலவேளை அது அவனின் வேதனையையும் கொண்டு வருகிறது. ஆகவே நீங்கள் அதனைக் கண்டால் அதனை திட்ட வேண்டாம். அதில் நலவானதை அல்லாஹ்விடம் கேளுங்கள். அதில் தீங்கானதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். (அபூ தாவூது)
இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை நாம் புரிந்து செயல் பட வேண்டும் என்பதற்காக குர்ஆன் தமூது கூட்டத்தாரை ஓர் படிப்பினையாக சுட்டிக்காட்டுகிறது. தமூது கூட்டத்தினருக்கு நபி சாலிஹ் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். அக்கூட்டத்தினர் பாறைகளை குடைந்து வாழும் பலசாலிகளாக இருந்தனர். அல்லாஹ்வை ஏற்க மறுத்து நபியின் அறிவுறுத்தலை மீறி வரம்பு மீறி செயல்பட்டு அநியாய அக்கிரமங்களில் ஈடுபட்ட போது அம்மக்களுக்கு இயற்கை பேரழிவாக இடிமுழக்கம் அல்லவா அவர்களை இல்லாமல் ஆக்கியது.
فلما جاء امرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن حزي يومئذ ان ربك هو القوي العزيز واخذا الذين ظلموا الصيحة فاصبحوا فى ديارهم جثمين
எனவே நம்முடைய தண்டனையான கட்டளை வந்தபோது சாலிஹையும் அவருடன் ஈமான் கொண்டோரையும் நம்முடைய கிருபையைக் கொண்டும் அந்நாளின் இழிவிலிருந்தும் நாம் காப்பாற்றினோம். நிச்சயமாக உமது ரப்பு அவன் ஆற்றல் மிக்கவன். (யாவற்றையும்) மிகைத்தவன்.
இன்னும் அநியாயம் செய்துக் கொண்டிருந்தோரை பேரிடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்களது வீடுகளிலேயே முகம் குப்புற விழுந்து (இறந்து) காலையில் கிடந்தார்கள். 11:66,67.
இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை மனித சமுதாயம் புரிந்துக் கொள்ள வேண்டும். நபி லூத் (அலை) அவர்களது கவ்முகள் இறைவன் விதித்த இறைவரம்புகளை மீறி தகாத வாழ்வு வாழ்ந்த போது நபியையும் அவர்களுக்கு வழிபட்டவர்களையும் பாதுகாத்து மாறு செய்தவர்களை இயற்கை பேரழிவு மூலம் அழித்தொழித்ததை ஏனையோருக்கு படிப்பினையாக திருமறை எடுத்தியம்புகிறது.
فلما جاء امرنا جعلنا عاليها سافلها وامطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد
எனவே நம்முடைய (தண்டனையாகிய) கட்டளை வந்த போது நாம் (அவர்களின் ஊராகிய) அதன் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியாக்கி விட்டோம். மேலும், அதன் மீது சுடப்பட்ட கற்களை தொடர் மலையாக பொழியச் செய்தோம். அக்கற்கள் உம்முடைய ரப்பிடமிருந்து அடையாளமிடப்பட்டதாக இருந்தது. அ(வ்வூரான)து அநியாயக் காரர்களுக்கு மிக தொலைவிலும் இல்லை. 11:82,83.
இது போன்றே மத்யன் வாசிகளுக்கு சுஐபு (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு அச்சமுதாயத்தவர்களில் இறைவரம்பு மீறி நடந்த போது அநியாயம் அக்கிரமங்கள் செய்துக் கொண்டிருந்தவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது என்பதையும் குர்ஆன் விவரிக்கிறது.
அவ்வாறே ஃபிர்அவ்னும் அவன் கூட்டத்தாரும் பனீ இஸ்ரவேலர்களில் சனிக் கிழமைகளில் வரம்பு மீறியோருக்கும் வேதனை இறக்கப்பட்டதையும் திருமறை படம்பிடித்து காட்டி இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை இச்சமுதாய மக்களுக்கு எடுத்தியம்புகிறது.
இவற்றையெல்லாம் அறிந்துக் கொண்டே இறைவனின் வல்லமையை புரிந்துக் கொண்டே மனித இனம் மாறுபட்டு நடக்கும் போது இயற்கை பேரழிவுகள் மூலம் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை செய்து பாடம் புகட்டுகிறான் அல்லாஹ். திருமறைக் குர்ஆன் விவரிக்கும் ஒரு செய்தி وكذلك اخذ ربك اذا اخد القرى وهي ظالمة ان اخذه اليم شديد
சில ஊர்கள் அவை அநியாயம் செய்துக் கொண்டிருந்த நிலையில் (வேதனையைக் கொண்டு) அவன் பிடித்தான். உம்முடைய ரப்பின் பிடி இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி நோவினை அளிக்கக் கூடியது. மிகக் கடினமானது. 11:102.
திருமறைக் குர்ஆன் விவரிக்கின்ற இது போன்ற செய்திகள் வாழும் மனித இனத்துக்கு படிப்பினையாகவும், எச்சரிக்கையாகவும் அமைகிறது. எனினும் மனித இனம் படிப்பினை பெறாது முழுக்க முழுக்க மாறு செய்யும் போது பேரழிவுகள் மூலம் இறைவன் பாடம் புகட்டுகிறான்.
அதன் விளைவாக தற்காலத்தில் காட்டரினா புயல் முதல் மாலா புயல் வரையும் கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் துவங்கிய கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக ஜப்பான் இந்தியா இலங்கை என்று ஒரே நேரத்தில் பல நாடுகளையும் நடுநடுங்கச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதையும் மனித இதயங்கள் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியுமா?அ ந்நாளை.
2001 ஜனவரி 26ம் நாள் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு இருபதாயிரம் மனித உயிர்கள் பலியாயிற்றே. இவைகள் மனித நெஞ்சத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தியது இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை தான் என்பதை மனித இதயங்கள் ஏற்று சீர் பெற்றது. இதற்கெல்லாம் என்ன காரணம் இறைவன் குர்ஆனில் கூறுவது கவனிக்க தக்கது.
ما اصابك من حسنة فمن الله وما اصابك من سيئة فمن نفسك
(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். 4:79.
மனிதன் அவன் வாழ்வில் இறை விசுவாசியாகி இறை நெருக்கத்தை பெற வேண்டுமானால் இரு விஷயங்களில் அனுதினமும் நடை போட வேண்டும்.
1. இறைவனை எப்போதும் நினைத்து வணங்கி அவன் விதித்த வரம்புகளை மீறாது நடக்க வேண்டும்.
2. இறைக்கடமை செய்வதுடன் படைப்பினங்களுக்கு நன்மை செய்து வாழ வேண்டும்.
தற்காலத்தில் முந்திய சமுதாயத்தவர்களில் பேரழிவுகளுக்கு ஆளான சமுதாயத்தினரை போன்று பிறர் நலம் கருதாது சுய நலம் கருதி பூமியில் குழப்பம் விளைவித்து இறைவரம்பு மீறி வாழ்வதில் மனித சமுதாயம் ஆனந்தம் அடைகிறது. அதுவே பூமியில் பேரழிவுகளுக்கு காரணமாக ஆகிவிடுகிறது.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான். எனினும் இது போன்ற இயற்கை பேரழிவுகள் மூலம் பாதிக்கப்படும் அனைவரும் வரம்பு மீறியவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்தவர்கள் எனும் முடிவிற்கும் நாம் சென்று விடக் கூடாது. காரணம் நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்பதை போன்று தீயோருக்கான வேதனைகள் நல்லோர்களையும் வந்தடையும் என்பதனையும் புரிய வேண்டும்.
وعن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اذا انزل الله تعالى بقوم عذابا اصاب العذاب من كان فيهم ثم بعثوا على اعمالهم _متفق عليه
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூலுல்லாஹி r அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் ஒரு கூட்டத்தார் மீது அதாபை (வேதனையை) இறக்கி வைத்தால் அவ்வேதனை அக்கூட்டத்திலுள்ள நல்லோர் உட்பட அனைவரையும் பிடித்துக் கொள்ளும். ஆனால் அவர்கள் பின்னர் கியாமத் நாளில் எழுப்பப்படும் போது அவரவர்களின் அமல்களுக்கேற்ப எழுப்பப்படுவர். (நல்லோர்கள் நல்ல அந்தஸ்துடனும், தீயோர் தீய நிலையிலும் எழுப்பப்படுவர்.) புகாரி, முஸ்லிம்.
இயற்கை பேரழிவுகள் இயற்கை சீற்றங்கள் பேரிழப்புகள் நிலநடுக்கங்கள், பூகம்பங்கள், சுனாமி ஆழி பேரலைகள் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் பலவிதமாக கூறினாலும் இஸ்லாமிய பார்வையில் மனிதர்களிடம் இறைவனை மறந்து பல்வேறு அடாத செயல்கள் தோன்றி விட்டால் பூமி தாங்காது. பேரழிவை ஏற்படுத்தும், சோதனைகள் தொடரும் என்பதை நபி மொழிக் கருத்து நமக்கு விளக்கம் தருகிறது.
1. பொது சேவையில் ஈடுபடுவோர் பொதுச் சொத்தை தங்களின் சொந்த சொத்தாக கருதி தம் மனம் போல் செயல்படுவது.
2. பிறர் கொடுத்து வைத்த அமானிதத்தை தான் பெற்ற இலாபமாக கருதி அதை பயன்படுத்துவது.
3. ஜகாத்தை கொடுக்காமல் இருப்பது.
4. அறிவும், நன்னடத்தை பெறுவதையும் நோக்கமாக கொள்ளாமல் (பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு) கல்வி பயிற்றுவிக்கப்படுவது.
5. தாயை துன்புறுத்துவது.
6. ஒருவன் தன் மனைவிக்கு முழுமையாக கட்டுப்படுவது.
7. தந்தையை வெறுப்பது.
8. பள்ளிவாசல்களில் கூச்சல், குழப்பங்கள் அதிகரிப்பது.
9. குற்றவாளிகளே நாட்டின் தலைவர்களாக உயர்வு பெறுவது.
10. தரம் கெட்டவர்களே சமூகத்தை வழி நடத்தி செல்வது.
11. நாட்டியமாடும் பெண்களும், வீண் பொழுது போக்கு விஷயங்களும் அதிகரித்து விடுவது.
12. சமுதாயத்தின் கடைக் கோடி மக்கள் சமுதாயத்தின் மூத்த குடிமக்களை குறை பேசி திரிவது.
13. மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படுவது. இது போன்ற சமுதாய சீர் கேடான செயல்கள் மலிந்து விட்டால் நெருப்புக் காற்றையும், நிலச் சரிவுகளையும், பூகம்பங்களையும், ஆழி பேரலைகளையும் உருமாற்றம் செய்யப்படுவதையும்,கல் மழை பொழிவதையும் எதிர் பாருங்கள்.
நூல் அறுந்து விட்ட முத்து மாலையில் முத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக விழுவதை போன்று ஆபத்துக்கள் தொடர்ந்து வெளியாகும் என்பது நபி அவர்களின் அமுத மொழிக் கருத்தாக விளங்க முடியும்.
எனவே இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்பதை உணர்ந்து மனித இனம் மனித பண்புகளை மனித நேயத்தை பிறர் நலனை பாதுகாத்து நல்லொழுக்க நெறி பேணி மன்னவனாம் அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறாமல் நேர்மையுடன் வாழ வழிவகை காண வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் பூமியில் சாந்தத்தையும், மனித வாழ்வில் சந்தோஷத்தையும், நிம்மதியையும் இம்மையிலும், மறுமையிலும் நற்பேற்றினை நம்மவர்களுக்கு வழங்கி அருள் புரிவானாக!

செவ்வாய், 11 அக்டோபர், 2011

Israel and Hamas reach deal: Shalit, 1,000 Palestinian prisoners to be released

Israel and Hamas have reached a deal to secure the release of captive IDF soldier Gilad Shalit, in exchange for 1,000 Palestinian prisoners held in Israeli jails. Shalit, who was abducted in a cross-border raid while serving in a tank unit near the Gaza Strip, has been in Hamas captivity for more than five years.
Aviva and Noam Shalit, parents of Gilad in June 2010 (photo: Itzik Edri)
Since his abduction in June 2006, ongoing negotiations for his release have broken down on multiple occasions. The terms of the current deal, which will see the release of numerous high profile Palestinian prisoners, are said to be nearly identical to those refused by Prime Minister Benjamin Netanyahu in the past.
The Israeli government met for a special session on Tuesday evening and was set to vote on the deal, which was mediated by Egyptian and German government officials. According to the Israeli news site Ynet, the eight senior cabinet ministers – comprising Israel’s top decision-making forum – approved the deal on Monday, rendering the government vote a formality.
According to media reports, several hundred of the prisoners will be released to Egypt, and the rest to the West Bank and Gaza. Popular Fatah leader Marwan Barghouti, who was sentenced to five life terms for his involvement in attacks on Israelis during the second Intifada, was initially said to be among the list of prisoners included in the deal, but Channel 10 later reported he would not be released. Other high profile leaders to remain in prison, despite long-standing Hamas demands, include Hamas leader Abdallah Barghouti and PFLP Secretary-General Ahmed Saadat.
In a televised announcement on Tuesday evening, exiled Hamas political leader Khaled Meshal said that a total of 1,000 male prisoners would be released, in addition to 27 women – reportedly all of the Palestinian women imprisoned in Israel. He said that the release would be carried out in two stages, the first of which would see 450 prisoners freed within a week, with the second carried out in two months. Israel’s Channel 10 reported that six Arab citizens of Israel would be among those released.
Israel recently toughened the conditions of the roughly 5,200 Palestinian prisoners held in Israeli jails, in what it presented as a bid to pressure Hamas to release Shalit. Hundreds of prisoners have launched a hunger strike in recent days in protest.
Demonstration on Tuesday in solidarity with Palestinian prisoner hunger strike (photo: Anne Paq/Activestills.org)

தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் – அனுராதபுர அட்டகாசம் III

பகுதி மூன்று: ஒரு முஸ்லிம் நபரின் அடக்கஸ்தலம் (ஸியாரம்) தனித்தே எங்கேனும் காணப்பட்டு, அந்த சமாதி தனிப்பட்ட வகையில் முக்கியத்துவமளிக்கப்பட்டு விஷேட மரியாதைக்கு குரியதுமாக ஆக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு விழாக்களும் சடங்குகளும் செய்யப்பட்டாலோ அல்லது இறந்த அந்த சமாதியிலுள்ள மனிதரின் பிரார்த்தனைகள்
அல்லது அவரின் சமாதியை தரிசிப்பது ஆத்மா ஈடேற்றம் தரும் செயல் என கருதப்படும் வகையில் ஏதேனும் நடைமுறைகள் பின்பற்றப்படும் பின்னணியில்தான் தர்க்காக்கள் உருவாகின்றன. அவ்வாறான சமாதியை தரிசிப்பதும் அங்கு பிரார்த்தனைகள் புரிவதும் ஓர் இறை நம்பிக்கைக்கு மாற்றமானது என்ற கருத்து கொண்டோர் இவ்வாறான தர்க்காக்களை தர்கத்துக் குள்ளாக்கி வருகின்றனர். கல்வி வளர்ச்சியுற்ற நிலையில் , மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையிலும் தொழிநுட்ப வளர்ச்சியும் அதனால் மத அறிவுத்தேட்டம் இலகுவாக்கப்பட்டுள்ளமையும் தர்க்காகளை மட்டுமல்ல இஸ்லாம் என்ற பெயரில் செய்யப்படும் பல வழிபாட்டு அனுஷ்டான முறைகளை கேள்விகுள்ளாக்கியுள்ளது .
பிற சமயங்களின் அனுஷ்டான தனிமனித வழிபாடு சடங்குகள் செல்வாக்கு முஸ்லிம் மதத்துள்ளும் மனித இயல்புகளுக்கும் பலவீனங்களுக்கும் அமைவாக முஸ்லிம்களுக்குள்ளும் ஊடுருவத்தொடங்கிய வரலாறும் மிக பழமையானது. இஸ்லாமிய பரம்பல் பல நம்பிக்கைகள் கொண்ட சமூகத்துள் , நாடுகளுள் பரவிய போதும் அவர்கள் பின்பற்றிய கலாச்சார நம்பிக்கைகள் என்பவற்றையும் முழுமையாக தவிர்க்க முடியாது போன சூழ்நிலையிலும் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை தொடர்பான பிறழ்வாக அவை பின்பற்றப்பட்டு வருகின்றன.
அந்த பின்னணியில் தர்க்கா சார்ந்த விவகாரங்கள், அதற்கெதிரான மதப்பிரிவினரால் சர்ச்சைகுள்ளாக்கப்பட்டு வருகின்றன. தனி மனிதரை அவர் கொண்டுள்ள்ள தவிர இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இறைத் தரகனாக காட்டும், அதிலும் குறிப்பாக அந்த மனிதரின் இறப்பின் பின்னர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சமய அனுஷ்டானங்கள் செய்யும் பின்னணியில்தான் தர்க்காக்களில் அமைந்துள்ள பல சியாரங்களில் தனிமனித வழிபாட்டை அல்லது அதனை சார்ந்து பின்பற்றப்படும் கிரிகைகளை ஊக்குவிப்பனவாக கண்டு கொண்டதால் அவற்றினை நீக்கும் அல்லது புறந்தள்ளும் முயற்சிகள் சில இடங்களில் இடம்பெற்றன. அந்த வகையில்தான் பல உள்ளார்ந்த மத முரண்பாடுகள் அண்மைக் காலங்களில் அவதானிக்கப்பட்டன. ஆயினும் கருத்து முரண்பாடுகள் முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவித்த பகை முரண்பாடுகளால் சில அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. சியா சுன்னி சமய பிரிவுகளிடேயே ஏற்படும் பரஸ்பர அழிவுகள் உலகின் பலரும் அறிந்த செய்தி. அங்கும் அடிப்படையில் தனிமனித முக்கியத்துவமே மூல காரணமாக பிரிவினைக்கு வலி கோலியது.
அந்த சூழ்நிலையில் தான் காத்தான்குடி பயில்வானின் அடக்கப்பட்ட உடலும் அவர் நிர்மாணித்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டு எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட சமாதி முக்கியத்துவத்தை தவிர்க்கும் வகையில் பிரதான சமய அடிப்படைகளை பின்பற்றும் பெரும்பான்மை சமயப்பிரிவினரில் உள்ள அதி தீவிர எதிர்ப்பாளர்களால் பயில்வானின் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அடிப்படை இஸ்லாமிய பண்பியல்புகளுக்கு எதிராக சட்டத்தை தமதாக்கி கொண்டு அத்தகைய செயல் எதிர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாய் பயில்வானை பின்பற்றிய சிலரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. எனினும் இந்த நிகழ்வுகளை தமிழ் ஆங்கில சிங்கள பத்திரிகைகள் தங்களின் சுய வியாக்கியானங்களுடன் வஹாபிகள், ஜிகாதிகள் என்றெல்லாம் பெரும்பான்மை முஸ்லிம் சமய வழிபாட்டாளர்களை தீவிரவாதியாக்கினர். அதற்கான இன்னுமொரு முக்கிய காரணம், முஸ்லிம்களுள் உள்ளோரே தமது எதிர் கருத்தாளர்களை அவ்வாறே அடையாளப்படுத்தியே தம்மையும் தமது கொள்கைகளையும் பாதுக்காக்கவும் முற்பட்டனர்.
முஸ்லிம் சமூகத்துள் பிற மத சமூகத்திலிருந்து ஊடுருவி முஸ்லிம் மத நம்பிக்கைகளாய் கலாச்சாரமாய் மாறிப்போன பல மூட நம்பிக்கைகள் தனிமனித வழிபாடுகள் பற்றிய எதிர் பிரச்சாரங்கள் அதுபற்றிய விழிப்புணர்வு என்பன ஏற்படக் காரணம் தவ்ஹீத் இயக்கம் வஹ்ஹாபி இயக்கம் ,ஜிஹாதி இயக்கம் என புதிய இயக்கங்கள் ஏற்பட்டிருப்பதுதான் என ஒரு சாரார் பலி கூறுவதும் அவாறான குற்றச்சாட்டினை ஊடகங்கள் பல செய்தியாக்குவதும் இன்று சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. ஆனால் இந்த சியாரம் அது அமைந்துள்ள கட்டடமான தர்க்கா , அங்கு நடைபெறும் பிற மத நம்பிக்கைகள் நடைமுறைகள் அனுஷ்டானங்கள் என்பன காலங்காலமாக இலங்கையில் இருந்து வந்திருக்கிறது.
அவற்றிக் கெதிராக சமூகத்துள் கல்விமான்கள் , மதவறிஞர்கள் நீண்ட நெடும் காலமாக பணியாற்றி வந்திருக்கிறார்கள் அவ்வாறான அறியாமையை மூட நம்பிக்கைகளை எதிர்த்து சமூக மறுமலச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். அந்த வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் அறிஞர் சித்தி லெப்பை. சித்தி லெப்பை தனது முஸ்லிம் நேஷன் (Muslim Nation) என்ற பத்திரிக்கையில் பின்வருமாறு 1882 ல் எழுதியது அவரின் காலகட்டத்தில் நடைபெற்ற தர்க்காவும் அதனை சூழ்ந்த நடைமுறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.
“சில காலத்துக்கு முன்பு அவுலியா க்களுக்கு நேர்ந்து கொண்டு காது குத்தினோம் , தலையிற் குடுமி வைத்தோம் , தர்க்காக்களுக்குப் பொய் தோப்புக்கரணம் போட்டோம் புலிவேஷம் ஆடினோம் . கோடி மரத்திடம் பிள்ளைத்தவம் கேட்டோம் . இப்படிப்பட்ட இன்னும் எத்தனையோ காரியங்களைச் செய்து வந்தோம் . ஆனால் தற்காலம் ஆலிம்கள் அவை மார்க்க விளக்கு என்றும் ஹராம் என்றும் விளக்கிவிட்டபடியால் நடத்தப்படாமல் விடுபட்டு போயிற்று. ” என்று சித்தி லெப்பை எழுதியிருந்தார். ( நன்றி: முஸ்லிம் நேஷன் -திரட்டு விரிவுரையாளர் எம்.ஐ .எம் அமீன்)
அவர் வஹ்ஹாபி , தவ்ஹீத் என எந்த இயக்கமும் இலங்கையில் இல்லாத காலகட்டத்தில் அவதானித்ததை சுய விமர்சனப் போக்கில் தன்னிலை கூற்றாக எழுதியவை பல , அவை யாவும் இன்றைய சமூக மத சீர்திருத்தவாதிகள் என கூறுவோரின் பலருக்கு முன்பு சுமார் ஒன்றே கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறியவை. ஆனால் இன்னமும் கல்முனை கொடியேற்றம் வருடாவருடம் யாருமே அடக்கப்படாத சமாதியை வைத்து நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பல இடங்களில் தர்க்காக்களில் கொடியேற்றம் உட்பட நேர்ச்சை நிகழ்வுகள் என பல அனுஷ்டானங்கள் தனி மனித வல்லமைகளில் நம்பிக்கையை கொண்டு நடத்தப்படுகின்றன.
ஜீலானி தர்க்கா புதிய இலக்கல்ல !
அனுராதபுரத்தில் உடைக்கப்பட்ட சியாரம் யுனெஸ்கோ (UNESCO) பாரம்பரிய பிரதேசத்தில் அல்லது துட்டகைமுனு அரசனின் உடல் தகனம் செய்யப்பட்ட அஸ்தி பரவிய ராஜமலகா வளாகப் பிரதேசத்துள் உள்ளதாக கூறப்பட்டே சிங்கள ராவய உறுப்பினர்களால் தகர்க்கப்பட்டது. சிங்கள ராவய இப்போது ஜீலானியை ( பலாங்கொடையில் ) அமைந்துள்ள அப்துல் காதர் ஜீலானி எனப்படும் ஈரானை பிறப்பிடமாக கொண்ட பக்தாத்தில் வாழ்ந்த ஒரு சூபியின் பேரில் அவர் தியானம் செய்ததாக கூறபப்டும் ஜீலானி குகையில் உருவாக்கப் பட்ட தர்க்காவை குறிவைத்திருப்பதாக அரசியல்வாதிகள் சிலர் கூறுகிறார்கள் . ஆனால் ஜீலானி அமைந்துள்ள இடம் தம்மா தீப எனும் பௌத்த புனித பிரதேசத்தில் அமைந்துள்ளதாக சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே எதிர்ப்புகள் எழுந்தன . அதிலும் குறிப்பாக இலகுவாக பௌத்த இனவாத உள்ளூர் அரசியலை முன்னெடுத்து பலன் பெரும் வகையிலே அவை முன்னெடுக்கப்பட்டன. இதில் மேட்டுக்குடி ரத்வட்ட குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஜீலானி ஒரு அகழ்வாராச்சிக் குற்பட்ட புராதன பௌத்த பிரதேசம் என்பதால் அதனை கலாச்சார அமைச்சு கையகப்படுத்த வேண்டும் என்றும் பௌத்த சங்க (பீட ) மட்டத்தின் ஆதரவுடன் பௌத்த இனவாதிகளின் தூண்டுதலுடன் முன்னெடுக்கப்பட்டன. எனவே தர்கா தகர்ப்பு அல்லது அதனை சுற்றியுள்ள அரசியல் என்பது நீண்ட கால பின்னணி கொண்டது.
அந் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அனுராதபுர சியார உடைப்பு அமைந்துள்ளது. மேலும் சியார உடைப்பு அல்லது சியாரம் அமைந்துளள காணியினை கையகப்படுத்தல் என்பது இப்போது வெறுமனே பௌத்த இனவாத எதிர்ப்பு மையமாக சில இடங்களில் அமைந்துள்ளது என்பதை விட முன்னரும் பௌத்த எதிர்ப்பினை கொண்டிருந்தது என்பதற்கு ஜீலானி ஒரு உதாரணமாகும் . அதேவேளை முஸ்லிகளின் அடிப்படை நம்பிக்கைகள் குறித்து ஆய்வும் தர்க்கமும் செய்வோர் எனப்படும் சில இஸ்லாமிய அமைப்புக்களில் ஒன்றான தவ்ஹீத் அமைப்பின் எதிர்ப்பு மையமாகவும் மாறியுள்ளது. ஜீலானி தர்க்கவை அன்மியுள்ள பிரதேசத்திலும் தவ்ஹீத் செயற்பாட்டினால் ஜீலானி முன்னைய முக்கியத்துவத்தினை இழந்து வருகின்ற சூழ்நிலையை முஸ்லிம் அடிப்படைவாதமாக மக்கில் வரி எனும் ஆய்வாளர் தனது முஸ்லிம் சமூக பற்றிய ஆய்வில் காண்பதையும் இங்கு நோக்கலாம்..
இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பாகவே ஜீலானி தர்கா காணியை அரசு சட்ட உரிமை மூலம் அந்த தர்காவுக்கு வழங்க வேண்டும் என்ற விண்ணப்பம் 1940 ௦ம் ஆண்டில் செய்யப்பட்ட போதும் அந்த விண்ணப்பம் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களாலோ பின்னர் வந்த சுதந்திர இலங்கையின் அரசினாலோ 1960௦ ஆம் ஆண்டுவரை வழங்கப்படவில்லை ஆயினும் அந்த ஜீலானி அமைந்துள்ள காணி நிரந்தர குத்தகைக்கு அரசினால் பட்டயம் மூலம் வழங்கப்பட்டது. மேலும் ஜீலானிக்கு அருகாமையில் கலாச்சார அமைச்சு ஒரு சிறிய பௌத்த கோபுரமொன்றை அமைக்க அகழ்வாராச்சி திணைக்களத்துக்கு அதிகாரமளித்தது. எனினும் அங்கு ஆரம்பிக்கப் பட்ட கட்டட வேலைகளை அதற்கெதிரான அரசியல் செல்வாக்கினை ஜீலானி நம்பிக்கையாளர் சபை பிரயோகித்து மந்திரி சபை கட்டளை (Ministerial Order ) பெற்று நிறுத்தினர்.
குறிப்பாக எழுபதுகளின் ஆரம்பத்தில் சிங்கள பௌத்த உரிமை கோரால் , எதிர்ப்பு செயற்பாடுகள் ஒருபுறமும் ஜீலானி நம்பிக்கையார் சபையின் அரசியல் செல்வாக்கு மறு புறமுமாக ஒரு பௌத்த முஸ்லிம் கலவரத்தை தவிர்த்தது. எனவே அரசியல் ரீதியாக ஜீலானிக் கெதிரான எதிர்பினை ஆளும் கட்சி முஸ்லிம் அமைச்சர்களை நாடி அரசு மூலம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. ஜீலானி பற்றிய பல தகவல்களை தனது முஸ்லிம் சமூகம் சம்பந்த பட்ட ஆய்வுக்கு வழங்கியவர் ஜீலானின் நம்பிக்கையாளர்களில் ஒருவரான காலம்சென்ற முன்னாள் பலாங்கொடை எம்.பீ அபூசாலி என்று மக் கில்வேரி குறிப்பிட்டுள்ளார். .
முஸ்லிம் சமூகத்துள் பிற மத சமூகத்திலிருந்து ஊடுருவி முஸ்லிம் மத நம்பிக்கைகளாய் கலாச்சாரமாய் மாறிப்போன பல மூட நம்பிக்கைகள் தனிமனித வழிபாடுகள் பற்றிய எதிர் பிரச்சாரங்கள் அதுபற்றிய விழிப்புணர்வு என்பன ஏற்படக் காரணம் தவ்ஹீத் இயக்கம் வாஹ்ஹாபி இயக்கம் ,ஜிஹாதி இயக்கம் என புதிய இயக்கங்கள் ஏற்பட்டிருப்பதுதான் என ஒரு சாரார் பலி கூறுவதும் அவாறான குற்றச்சாட்டினை ஊடகங்கள் பல செய்தியாக்குவதும் இன்று சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.
சென்ற சில வருடங்களாக இலங்கையில் நடைபெறும் உள் மத முரண்பாடுகள் பல சட்ட அத்துமீறல்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் காரணமாயின. அந்த வகையில் இரண்டு வருடத்துக்கு முன்பு மத உபன்யாசம் பண்ணி உருவேற்றி தனது மதத்தின் -சமூகத்தின் -இன்னொரு பிரிவினர் மீது கொள்கை வேறுபாட்டால் மத தாக்குதலை மேற்கொள்ள ஏவிவிட்ட மௌலவி ஒருவரை “ஷேய்க் பிரபாகரன் “ என்று வர்ணித்த சம்பவங்களுடன் …
தொடரும்……