கிழக்கு முஸ்லிம்களை நோக்கி பிரபல ஆங்கில ஊடகங்களும் புலி சார்பு ஊடகங்களும் திட்டமிட்டு சதிவலைகளை பின்னுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளும், அனைத்துலக தீவிரவாத அமைப்புகளும் இதற்கு உதவி வருவதாகவும் ஆங்கில செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது. அதை தூக்கிப்பிடித்துகொண்டு புலி சார்பு ஊடகங்க வரிந்து கட்டுகின்றன.
இதில் வேடிக்கையானதும் வேதனையானதுமான விடயம் என்னவென்றால், இந்த பொய் செய்திக்கு தூபம் இட்டவர் தன்னை முஸ்லிம்களின் பிரதிநிதி என்று காட்டிக்கொள்ளும் இலங்கையின் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா. இவரை மேற்கோள்காட்டியே ஆங்கில நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜிகாத் அமைப்பின் நிதியுதவியுடன் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கிழக்கிலுள்ள சுபி முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் சந்தித்து முறையிடப் போவதாகவும் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
மக்கள் உண்மையான இஸ்லாத்தை தெளிவாக பின்பற்றுவதை பொறுக்கமுடியாத அலவி மௌலானா இப்படி வரிந்து கட்டிக்கொண்டு தனது சொந்த சமூகத்தின் மீதே சேறு பூசுவதை மேற்கொள்கின்றார்.
வழிகேட்டிலிருந்து மக்கள் தெளிவுபெருவதை விரும்பாத இவர் தனது குற்றச்சாட்டில் கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சுபி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்த ஆயுதக்குழுக்கள் முனைவதாகவும், வகாபி இஸ்லாமிய பாடசாலையை பின்பற்றும் இந்த ஆயுதக்குழுக்கள், சுபி முஸ்லிம்களின் மசூதிகளையும், வழிபாட்டு இடங்களையும் தாக்குவதாகவும் புதிய கதையை கட்டிவிட்டுள்ளார்.
இந்த கதைகளுக்கு தலையும் வாலும் வைத்து ஆங்கில பத்திரிகையும் புலிசார்பு இணையமும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குழுக்களுக்கு பல மத்திய கிழக்கு நாடுகள் நிதியுதவி செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் வறுமையில் உள்ள சில முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஆயுதக்குழுக்களில் இணைகிறார்கள். இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து போரிடுவதற்குக் கூட அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த கப்சாவில் கதை கட்டப்பட்டுள்ளது.
இந்த பொய்யுரையில் தெளிவாக திட்டமிட்டு காத்தான்குடியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாத எமது சமூக காவலன் (?) அலவி அலவி மௌலானா காத்தான்குடியை கோர்த்து விட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக