வியாழன், 10 நவம்பர், 2011

அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை

அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை” என ஈரானின் ஜனாதிபதி அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிக்கும் சக்தியை நிலையை நெருங்கி விட்டதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலின் பின்னணியில் ஈரான் ஜனாதிபதி நஜாதின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் அவரின் அறிகையில் இதர நாடுகளை வறுமையில் உழலச்செய்து அவர்களுடைய சொத்துக்களை ஏப்பமிட்டு அமெரிக்கா தனது சொந்த செல்வ செழிப்பை உறுதிச்செய்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அங்கீகரிக்க முடியாது.
அணு ஆயுதமற்ற உலககை தோற்றுவிக்க அமெரிக்கா ஈடுபாடு காட்டவில்லை, தன்வசம் இருக்கும் அணுகுண்டுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா 81 பில்லியன்- $81 billion- அமெரிக்க டொலர்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ளது ஆனால் ஈரான் முழு ஆண்டுக்குமான அணு ஆய்வுக்காக செலவாக வெறும் 250 மில்லியனை-merely $250 million- மட்டும் ஒதுக்கியுள்ளது.
சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் தலைவர் யூகியோ அமானோ அமெரிக்காவின் பொம்மை. மேற்க்கு சக்திகளின் அணு ஆயுதங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்யாத சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அமெரிக்கா வசம் 5000 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது. ஈரானின் அணுசக்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தயார் செய்துள்ள அறிக்கை பொய்யான காரணங்களின் பின்னணியை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளிடன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வம் அல்லாத அறிக்கையின் வாதத்தில் உறுதியாக இருந்தால் அதனை விரைவாக வெளியிட வேண்டும் என ஸலாஹி சவால் விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக