சவுதி முடிக்குரிய இளவரசரும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருமான சுல்தான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அப்துல் அசிஸ் அல் சவுத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அப்துல் அசிஸ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுல்தான் அவர்கள் 1962 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றதில் இருந்து சவுதியில் முடிவெடுக்கும் ஒரு மைய புள்ளியாக செயற்பட்டார்.
மன்னர் அப்துல்லா இப்போது புதிய முடிக்குரிய இளவரசரை நியமிக்க “Allegiance Council” என அழைக்கப்படும் “விசுவாசம் கவுன்சில்”ஐ அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது துணைப் பிரதமரும் உள்துறை மந்திரியுமான இளவரசர் நைப் (Naif) அவர்களின் பெயர் இதற்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசுவாசக் கவுன்சிலானது 2006 இல் அப்துல்லா அவர்கள் மன்னரானபோது ஆரம்பிக்கப்பட்டது. இதன் முக்கிய செயற்பாடாக மன்னருடைய தெரிவை அல்லது பரிந்துரை செய்யப்படும் ஒருவரை முடிக்குரிய இளவரசராக அங்கீகரிப்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக