லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான்.
இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள். லிபியா இன்னொரு ஈராக்காக , ஆப்கானிஸ்தானாக , ஏன் இன்னொரு பாகிஸ்தானாக மாறினாலும் மக்கள் விரும்பும் இஸ்லாமிய புரட்சி தூரமான கனவாகிவிடும். துனூசிய எழுச்சி, எகிப்திய எழுச்சி இரண்டிலிருந்தும் இது வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்
உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபியின் மகன் முஹ்தசிம் கொல்லப்பட முன்னர்
கடாபியின் மக்களில் அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டு வந்த சைபுல் இஸ்லாம் என்ற மகன் தப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவரை மேற்கு ஏகாதிபத்தியம் பாதுகாத்து தேவையான போது தமக்கு சாதகாமாக பயன்படுத்தப்போகின்றதோ ? தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக