உலகில் இன்று அதிகளவான கருக்கலைப்பு நடைபெறும் நாடாக இலங்கை மாறிவருகின்றது. 2010 ஆம் ஆண்டில் 320000 க்கு மேற்பட்ட கருக்கலைப்புகளைச் செய்து தென்னாசியாவில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் இலங்கையுள்ளது. 2011இல் நாளொன்றுக்கு தொளாயிரம் சட்டரீதியான கருக்கலைப்பு இடம்பெறுவதாக குடும்ப சுகாதார பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிவரும் தகவல்களை விடவும் வெளிவராமல் இரகசியமாக இடம்பெறும் கருக்கலைப்புகள் மற்றுமொரு மடங்கு இருக்கும் என்று நம்பலாம். திருமணம் முடித்தவர்களின் இவ்வாறான கருக்கலைப்புகளுக்கு குடும்ப வறுமை முக்கிய காரணமாக கூறப்பட்டாலும் வறுமையை காரணம் காட்டி கருவிலுள்ள ஒரு சிசுவை கொலை செய்வதென்பது மிருகத்தனமான ஒரு செயலாகவுள்ளது.
சிலர் பிள்ளை வளர்ப்பதிலுள்ள சிரமத்தை காரணமாக வைத்து கருக்கலைப்பை செய்கின்றனர். சிலர் கருவிலுள்ளது பெண் சிசு என்றதும் அதனை கொலை செய்கின்றனர். இது இலங்கை இறக்கமற்ற அரக்கர்களைக் கொண்ட பயங்கரமான ஒரு யுகத்தை நோக்கிச் செல்கின்றது என்பதைக் காட்டுகின்றது.
முன்னொரு காலத்தில் தினமொன்றுக்கு ஒரு வேளை அல்லது இரண்டு வேளைகள் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டக்கூடிய மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஐந்தாறு பிள்ளைகள் இருக்கும். இன்று மூவேளை வயிறு முட்ட சாப்பிட்டு வாழும் மக்கள் பிள்ளைகளை பெறுவதை வெறுக்கிறார்கள். தாம் வாழ்ந்துவிட்டு மரணித்தால் போதும் தமக்கு ஒரு பரம்பரை தேவையில்லை என்பதாக சிலர் கருதுகிறார்கள். இவ்வாறானவர்கள் வயது போய் கிழ வயதையடைந்த பின்னர் தனிமையில் இருக்கும் போது தான் பிள்ளைகளை பெறாமல் விட்டதற்காக கவலைப்படுகிறார்கள். இது காலம் தாழ்த்தி வந்த ஞானமாக இருந்தாலும் வயோதிபர்களான நிலையில் அவர்களால் எதையும் செய்ய முடியாது.
இந்தக் கருக்கலைப்பு சில நாடுகளில் சட்டம் அங்கீகரித்துள்ள போதும் சிசுக்களை அழிப்பது ஈவிறக்கமற்ற ஒரு கொலைச் செயலாகும். -இலங்கையில் இது சட்டவிரோதமானது- இஸ்லாத்தில் இவ்வாறான சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறானவர்கள் மறுமையில் நரகத்துக்குரித்தானவர்களாக இருப்பர்.
இந்தக் கருக்கலைப்பு சில நாடுகளில் சட்டம் அங்கீகரித்துள்ள போதும் சிசுக்களை அழிப்பது ஈவிறக்கமற்ற ஒரு கொலைச் செயலாகும். -இலங்கையில் இது சட்டவிரோதமானது- இஸ்லாத்தில் இவ்வாறான சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறானவர்கள் மறுமையில் நரகத்துக்குரித்தானவர்களாக இருப்பர்.
கருக்கலைப்பு செய்யும் பெண்கள் எல்லோருமே 40 வயது தாண்டிய பின்னர் பல வகை உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். கருக்கலைப்பு செய்யும் பெண்களில் ஏறக்குறைய 25 விழுக்காடு பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோய் வியாதியை எதிர்நோக்குகின்றனர். இந்த வகையான புற்றுநோய் ஏற்படுமிடத்து வயிற்றுக்குள் கா;ப்பப்பை உள்ள இடத்தில் ஒரு வகை குத்து வலி இருப்பதுடன் இதனால் அப்பெண்கள் சாதாரணத் தன்மையை இழந்து பலகீனமடைகின்றனா;. இவர்கள் கடுமையான கோபம் காட்டுபவர்களாகவும் தாம்பத்திய உறவில் விருப்பமற்றவர்களாகவும் மாறிவிடுகின்றனர். முழங்கால் வலி இடுப்பு வலி மார்பு வலி தலைவலி என்பன கருக்கலைப்பு செய்யும் பெண்களை அதிகமாக தாக்குவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வறுமையை தவிர்க்கவும் வேலைப்பழுவை குறைக்கவும் செய்யும் கருக்கலைப்பால் இறுதியில் பெண்கள் உடல் உள ரீதியான பாதிப்புகளை பெண்களுக்கு கொண்டு வந்து எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் நோயுடன் துன்பப்பட்டு வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கருக்கலைப்பை விட பிள்ளையை பெற்றெடுத்திருந்தால் மேற்சொன்ன பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம்.
கருக்கலைப்பு செய்யும் இன்னொரு சாரார் திருமனமாகாத இளம் யுவதிகளாவர். இவர்கள் முறையற்ற நடத்தைகளினூடாக கருவுற்று மற்றவர்கள் அதை அறிந்துவிடக்கூடாது என்பதற்காக கருக்கலைப்பைச் செய்கின்றனர். இதனால் இவர்கள் சிறு வயதிலேயே கட்டுப்பாடற்ற மாதவிடாய் வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு ஆளாகி தம்முடைய வாழ்க்கையை பாழாக்கிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் மனநோய் போன்றவற்றுக்கு ஆளாகிவிடும் அபாயமுள்ளது. இவ்வாறு அவர்கள் சீரழிந்து போவதற்கு அவர்களின் பெற்றோர்களோ பெரும்பாலும் காரணமாகின்றனர். பிள்ளை கல்வியில் முன்னேர வேண்டுமென்ற ஆசையில் பல்வேறு இடங்களுக்கும் பிள்ளைகளை அனுப்புபவர்கள் பிள்ளைகள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. இன்று பாடசாலை செல்லும் மாணவிகள் கூட விபச்சாரம் செய்யும் நிலமை இலங்கையில் காணப்படுகிறது. ஆண் நண்பன் (போய் பிரண்ட்) இல்லை என்றால் சகமாணவிகள் கிண்டல் செய்வார்கள் என்று சிந்திக்கக் கூடிய அளவுக்கு நிலமையுள்ளது. அதனால் கண்ட ஆண்களுடன் வகுப்பறைகளிலும் வீதிகளிலும் பழகுவதும் அதனூடாக கற்பையிழப்பதும் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் தென் இலங்கை கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையொன்றின் போது நாற்பதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகள் பாடசாலை நேரத்தில் இளைஞர்களுடன் கடற்கரைகளில் சல்லாபம் அடித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்டுக்கடங்காமல் தான் தோன்றித்தனமாக செயற்படும் யுவதிகள் தகாத முறையில் தகாத உறவுகளை வைத்து கருத்தரிப்பதும் பிறகு அவற்றை சட்டமுறையற்ற விதத்தில் கலைப்பதும் இன்று இலங்கையில் பரவலாக நடைபெறும் ஒரு செயலாகிவிட்டது. இவ்வாறான யுவதிகளில் நூறு சதவீதமானோதகாத திருமணம் முடிப்பதாகக கூறி ஏமாற்றப்பட்டே தகாத செயல்களில் ஈடுபடுகிறாதகாதகள். பெண்களின் பொதுவான சுபாவம் ஏமாறுவதாகும். போலியான வாக்குறுதிகளை இலகுவில் நம்பிவிடக் கூடியவதகாதகள் பெண்கள். இந்த பலவீனத்தை சுயநலம் கொண்ட ஆண்களில் சிலர் துஷ்பிரயோகம் செய்கின்றனர் . இவ்வாறு திருமணத்துக்கு முன்பே தகாத உறவு வைத்து கரு உருவாகியவுடன் தற்கொலை செய்து கொள்வோர் அதிகமாகிவருகின்றது. கருக்கலைப்பு செய்து உடல் உள ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவோர் தொகையும் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. இன்றும் சில ஆண்டுகளில் ஆரோக்கியமற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களை இலங்கை அதிகமாக கொண்டிருக்கும். எனவே பெற்றோரும் குடும்பத்தின் பாதுகாவலர் களாக உள்ள ஆண்களும் உடனடியாக விழித்தெழ வேண்டும்.
பெண்களின் கல்வி மேல்கல்வி என்ற விடயங்களில் அவதானம் தேவை. மேலும் வேலை செய்யக்கூடிய பெண்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். திருமணத்துக்கு முன்பு ஆண்களுடன் பழகுவதை முற்றாக தவிர் க்க வேண்டும். இந்நிலையில் ஆண்களின் பசப்பு வார் த்தைகளை நம்பி கற்பை பறிகொடுப்பது என்பது எந்தப் பெண்ணும் செய்யக்கூடாத காரியம். அற்ப ஆசைக்காக கற்பையிழந்தால் அதன் பின்விளைவுகளாக நாற்பது வயதின் பின் பல்வேறு நோய்களுடன் வாழவேண்டியேற்படும் என்பதை கருக்கலைப்புச் செய்பவார் கள் சிந்தித்து நடக்க வேண்டும். ஒரு குழந்தையை வளர் த்தெடுப்பதை விட கருக்கலைப்பினால் ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்தெடுக்க அதிகம் செலவாகும். அதைவிட ஆரோக்கியமற்ற உடலால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். எனவே பிள்ளைப் பேறுகளை தள்ளிப் போட விரும்பும் திருமணமான தம்பதியர் இஸ்லாம் அனுமதித்த வழிமுறைகளை கையாளமுடியும் அதைவிடுத்து கருத்தடை மாத்திரை கருத்தடை ஊசி கருக்கலைப்பு என்பனவெல்லாம் ஆரோக்கியத்துக்கு பெண்கள் வைக்கும் வேட்டாக அமைகின்றது. எனவே ஆரோக்கியமான சமுதாயத்தை கொண்ட இலங்கையை உருவாக்குவதற்காக ஆண்களும் பெண்களும் கட்டுக்கோப்புடன் செயற்படவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக