ஞாயிறு, 2 அக்டோபர், 2011

மன்னாரில் எரிவாயு படிவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு தளம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கண்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார். மன்னாரில் அகழ்வுகளை மேற்கொண்டு வரும் கெயிரின் இந்திய நிறுவனம் மன்னாரில் இயற்கை எரிவாயு கூடிய அளவில் காணப்படுவதை கண்டரித்து உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் எரிவாயு படிவு காணப்படுவதாக கெயிரின் இந்திய நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1354 மீற்றர் வரை ஆழம் வரை துளையிட்டதில் எரிவாயு படிவு கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் வணிக நோக்கத்திற்கு இன்னமும் ஆழ்ந்து துளையிடப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக