வெள்ளி, 30 செப்டம்பர், 2011

இருள் சூழ்ந்த தாமரையும் நான்தானே


தெய்வம் தந்த உறவே

என்னைத் தேடி வந்த புது வரவே

கண்ணில் இன்று நீரை

கங்கை போல ஏன் ஓட விட்டாய்!.....



நள்ளிரவில் சூரியனாய்

நான் அழைத்த என் தலைவா

சொல்லு ஒரு வார்த்தை

என் சோகம் தீர்ந்து போவதற்கு ....



விண்வெளியில் நீ உலவ

உனைக்கண்டு விழித்த மலர் நான் கருக

என் அருமை புரியாமல்

எதர்க்காக எனை வதைக்கின்றாய்....!!!



சொல்லாமல் புரிவதெங்கே .......

நீ இல்லாமல் நான் வாழ்வதெங்கே ..

எல்லாமே மாயை என்பேன்

நான் எதற்காகப் பிறந்தேன் இங்கே !....



ல்லாத காதல் உணர்வை நீ ஏனோ

எனக்குள்ளே வரவளைத்தாய் ....

பதில் சொல்லாமல் பிரிந்து சென்று

என்னைப் பாடாய்ப் படுத்தும் அன்பே...



எல்லாமே நாடகம் போல்

எழுதாத துன்பக் காவியம் போல்

முன்னாளில் நான் செய்த பாவத்திற்கு

இந்நாளில் நீ தந்த பரிசோ ..............//



சொல்லு ஒரு வார்த்தை அது போதும்

உன் சுந்தர மொழி கேட்டுப் பலகாலம்

என் எழில் கொஞ்சும் பாடலின் தலைவா

இந்த ஏமாற்றம் எனக்கென்ன புதிதா,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக